உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்

103

(எ.டு) மகன் பிறந்தா னெனத் தந்தை மகிழ்ந்தான் இதில் வினையோடியைந்தது.

""

“அழுக்காறென ஒருபாவி’ “பொள் ளென வாங்கே புறம் வேரர்’

இது விரைவுக் குறிப்பு மொழி.

66

>>

இதில் பெயரோடு இயைந்தது.

""

இதில் குறிப்போடு இயைந்தது.

ஒல்லென ஒலித்தது இதில் இசையொடு இயைந்தது.

"நிலமென நீரென நெருப்பென

“வெள்ளென விளர்த்தது

""

""

இதில் எண்ணொடு இயைந்தது.

இதில் பண்போடு இயைந்தது.

‘எ’ என்னும் உரிச்சொல் உணர்த்தும் பண்பு :

ஏ என்னும் உரிச்சொல் பெருக்கம் என்னும் பண்பை யுணர்த்தும்.

(எ.டு) “ஏகல்லடுக்கம்

ஏகார விடைச்சொல் :

ஏகாரவிடைச்சொல் தேற்றமும், வினாவும், எண்ணும், பிரிநிலையும், எதிர்மறையும், இசைநிறையும், ஈற்றசையுமாகிய ஏழு பொருளையுந்தரும்.

(எ.டு)

1. உண்டே மறுமை:- இது தெளிவுப்பொருளைத் தருதலால் தேற்றம்.

2. நீயே கொண்டாய்? - இதில் நீயா கொண்டாய் என வினவுதற் பொருளைத் தருதலாற்றல் வினா.

3. நிலமே நீரே தீயே இதில் நிலமும் நீரும் தீயும் என எண்ணுதலால் எண்.

4. அவர்களுள் இவனே கொண்டான் – இதில், ஒரு கூட்டத்திலிருந்து ஒருவனைப் பிரித்து நிற்றலால் பிரிநிலை.

5. நானே கொண்டேன் இதில் நான் கொள்கிலேன் என்னும் பொருளைத் தருமிடத்து எதிர்மறை.

6. 'ஏயே இவளொருத்தி பேடி' இதில் வேறு பொருளில்லாமல் செய்யுளில் இசையை நிறைத்து நிற்றலால் இசை நிறை.

7. 'இயம்புவனெழுத்தே’

நிற்றலால் ஈற்றசை.

இதில் வேறு பொருளில்லாமல் இறுதியில்