உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

ஏவல் வினை :

4 இளங்குமரனார் தமிழ்வளம்

முன்னிலை ஒன்றற்கே

வருவதாய்,

எதிர்காலத்து மாத்திரமே வருவதாய், முன்னின்றதனைத் தொழிற்படுத்தும் வினை ஏவல் வினையாகும்.

(எ.டு) நடமின்.

ஏழாம் வேற்றுமையின் உருபுகளுக்குரிய பொருள்கள் :

ஏழாம் வேற்றுமை உருபுகள், தம்மையேற்ற பொருள், இடம், காலம், சினைகுணம், தொழில் என்னும் ஆறுவகைப் பெயர்ப் பொருளையும், வருமொழிப் பொருளாகிய தற்கிழமைப் பொருளுக்காயினும், பிறதின்கிழமைப் பொருளுக்காயினும், இடப் பொருளாக வேறுபடுத்தும். அவ்வாறு வேறுபட்ட இடப் பொருளே இவ்வுருபுகளின் பொருள்களாகும்.

(எ.டு)

மணியின்கண் இருக்கின்றது ஒளி

தற்கிழமை

மரத்தின்கண் வாழ்கின்றது பறவை பிறிதின்கிழமை

ஊரின்கண் உள்ளது வீடு

தற்கிழமை

ஆகாயத்தின் கண் பறக்கின்றது பறவை-பிறிதின் கிழமை

நாளின்கண் நாழிகை உள்ளது

வேனிலின்கண் பாதிரி பூக்கும்

கையின்கண் உள்ளது விரல்

தற்கிழமை

கையின்கண் விளங்குகின்றது வளை பிறிதின் கிழமை

நிறத்தின்கண் உள்ளது அழகு

தற்கிழமை

இளமையின்கண் வாய்த்தது செல்வம்

பிறிதின் கிழமை

ஆட்டத்தின்கண் உள்ளது நளிநயம் தற்கிழமை

ஆட்டத்தின்கண் பாடப்பட்டது பாட்டு-பிறிதின் கிழமை

‘ஐ’ என்னும் உரிச்சொல் உணர்த்துங் குறிப்பு :

ஐ என்னும் உரிச்சொல் அழகு என்னுங் குறிப்புணர்த்தும். (எ.டு) ‘ஐதே காமம் யானே'