உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்

ஐந்தாம் வேற்றுமை உருபுகளேற்கும் பொருள்கள் :

105

ஐந்தாம் வேற்றுமை உருபுகள் தம்மையேற்ற பெயர்ப் பொருளை நீக்கப் பொருளாகவும், ஒப்புப் பொருளாகவும், எல்லைப் பொருளாகவும், ஏதுப் பொருளாகவும் வேறுபடுத்தும். அவ்வாறு வேறுபட்ட நீக்கப் பொருள் முதலியன இவ்வுருபு களின் பொருள்களாகும்.

(எ.டு)

மலையின் வீழருவி மலையில் வீழருவி

}

நீக்கப் பொருள்

ஒப்புப் பொருள்

பாலின் வெளிது கொக்கு பாலில் வெளிது கொக்கு

சீர்காழியின் வடக்குச் சிதம்பரம்

சீழ்காழியில் வடக்குச் சிதம்பரம்

கல்வியிலுயர்ந்தவன் கம்பன் }

ஐந்தாம் வேற்றுமையின் உருபுகள் :

எல்லைப் பொருள்

ஏதுப் பொருள்

இன், இல் ஆகிய இரண்டும் ஐந்தாம் வேற்றுமையின் உருபுகளாகும். நீக்கப் பொருளிலும், எல்லைப் பொருளிலும் இன், இல்' உருபுகளின் மேல் நின்று இருந்து என்பவை சிலவிடத்துச் சொல்லுருபுகளாக வரும்.

ஐயறிவுயிர் :

உடம்பினாலும்,

வாயினாலும்,

மூக்கினாலும்,

கண்ணினாலும், அறியும் அறிவோடு, செவியறிவையும் பெற்றிருப்பது ஐயறிவுயிராகும். அவை, நாற்கால் விலங்குகளும் பறவையும்.

ஒரு குணந்தழுவிய உரிச்சொல் :

சால, உறு, தவ, நனி, கழி, கூர் என்பன மிகுதி என்னும் ஒரே குணத்தையுணர்த்தும் உரிச் சொற்களாகும்

(எ-டு) சால

சாலப்பலர்

உறு உறுபுகழ்

தவ தவப்பல