உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

இளங்குமரனார் தமிழ்வளம்

நனி - நனிபேதை

கூர்

களிகூர் மனம்

4

கழி

கழிபெருங் காதல்

ஒரு பொருட் பன்மொழி :

சொல்லின்பந் தோன்றுதற் பொருட்டு ஒரு பொருண்மேல் பல சொற்கள் தொடர்ந்து வருதலும் உண்டு. அவ்வாறு வருதற்கு ஒரு பொருட் பன்மொழி என்று பெயர்.

(எ-டு) மீமிசை ஞாயிறு

உயர்ந்தோங்கு பெருவரை

ஒருமை பன்மை மயக்கம் :

ஒருமைப் பாலிற் பன்மைச் சொல்லையும், பன்மைப் பாலிற் ஒருமைச் சொல்லையும் ஒரோவிடத்துத் தழுவிச் சொல்லுதலும் உண்டு.

(எ.டு) ‘வெயிலெல்லாம் மறைத்தது மேகம்' - ஒருமைப்

பன்மை மயக்கம்.

‘இரண்டு கண்ணும் சிவந்தது' பன்மையொருமை மயக்கம்.

ஓகார விடைச் சொல் :

ஓகார விடைச்சொல் ஒழியிசையும், வினாவும், சிறப்பும், எதிர்மறையும், தெரிநிலையும், கழிவும், பிரிநிலையும் அசை நிலையுமாகிய எட்டுப் பொருளையும் தரும்.

(எ-டு)

படித்தற்கோவந்தான் - இதில் படித்தற்கன்று; விடுயாடுதற்கு வந்தான் என ஒழிந்த பொருளைத் தருதலால், ஒழியிசை.

குற்றியோ மகனோ? இதில் குற்றியா மகனா என வினாவுதற் பொருளைத் தருதலால், வினா.

பெரியன்! இதில், ஒருவனது பெருமையின் மிகுதியைக் காட்டுதலால், உயர்வு சிறப்பு.

ஓ ஓ கொடியன்

இதில் ஒருவனது கொடுமையின் மிகுதியைக்

காட்டுதலால், இழிவு சிறப்பு.