உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்

(எ-டு) “பணைத்து வீழ் பகழி”

"வேய்மருள் பணைத்தோள்

""

‘பயப்பு' என்னும் உரிச்சொல் உணர்த்தும் பண்பு : பயப்பு என்னும் உரிச்சொல் பயன் பண்பையுணர்த்தும்.

(எ.டு) “பயவாக் களரனையர் கல்லாதவர்’

பரத்தலாகிய குறிப்புணர்த்தும் உரிச் சொற்கள் :

""

135

என்னும்

ஞெமிர்தலும் பாய்தலுமாகிய இரண்டு உரிச்சொற்களும் பரத்தல் என்னுங் குறிப்புணர்த்தும்.

(எ.டு)

“கருமணன் ஞெமிரிய திருநகர் முற்றத்துப் பாய்புனல்

பலவின் பாற் படர்க்கை வினைமுற்று :

அ ஆ என்கின்ற விகுதிகளை இறுதியிலுடைய மொழிகள் அஃறிணைப் பலவின்பாற் படர்க்கைத் தெரிநிலை வினை முற்றுங் குறிப்பு வினைமுற்றும் ஆம். இவற்றுள் ‘ஆ’ என்கின்ற விகுதி எதிர்மறையில் மட்டுமே வரும். உடன்பாட்டில் வாரா.

(எ.டு)

இறப்பு

நடந்தன

எதிர்வு நடக்கின்றன

நிகழ்வு

நடப்பன

குறிப்பு

குழையன

நடவா (ஆகார விகுதி எதிர்மறையில் வந்தது)

பலர்பாற் படர்க்கை வினைமுற்று :

பாற்

அர், ஆர், ப, மார் என்கின்ற நான்கு விகுதிகளையும் இறுதியிலுடைய மொழிகள் உயர்திணைப் பலர் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றும் குறிப்பு வினை முற்றும் ஆம். இவற்றுள் மாரீற்று வினைமுற்றுப் பொதுவிதியால் பெயருடன் முடிவதன்றி வினையுடனும் முடியும்.

(எ.டு)

இறந்தகாலம்

நிகழ்காலம்

எதிர்காலம்

குறிப்பு

நடந்தனர்

நடக்கின்றனர் நடப்பர்

குழையர்

நடந்தார்

நடக்கின்றார்

நடப்பார்

குழையார்