உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

4 இளங்குமரனார் தமிழ்வளம்

படர் என்னும் உரிச்சொல் உணர்த்துங் குறிப்பு :

படர் என்னும் உரிச்சொல் உள்ளுதலும் செலவுமாகிய குறிப்புகளையுணர்த்தும்.

(எ.டு) "வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி

“கறவை கன்று வயிற்படர”

பண்பின் இலக்கணம் :

""

ஆகிய

உயிருடையதும் உயிருடையதல்லாததும் இருவகையுள் அடங்குகின்ற பொருள்களினுடைய குணங்கள் பண்புகளாகும்.

பண்புப் பகுதிகள் :

செம்மை, சிறுமை, சேய்மை, தீமை, வெம்மை, பொதுமை, மென்மை, மேன்மை, திண்மை, உண்மை, நுண்மை ஆகியனவும் இவற்றிற்கு எதிரான வெண்மை, கருமை முதலியனவும் இவை போல்வன பிறவும் பண்புப் பொருளினின்றும் வேறுபொருள் பகுக்கப்படாத நிலையுடைய பதங்களாம்.

பண்புப் பெயர் விகுதிகள் :

மை, ஐ, சி, பு, உ, கு, றி, று, அம், நர் என்பன பண்புப் பெயர் விகுதிகளாகும்.

(எ.டு) நன்மை, தொல்லை, மாட்சி, மாண்பு, மழவு, நான்கு, நன்றி, நன்று, நலம், நன்னர்

பண்புத் தொகை :

ஆகிய என்னும் பண்புருபு மறைந்து நிற்கப் பண்புப் பெயரோடு பண்பில் பெயர் தொடர்வது பண்புத் தொகையாம். அது வண்ணம், வடிவு, அளவு, சுவை என நான்கு வகைப்படும். (எ.டு) செந்தாமரை - வண்ணப் பண்புத் தொகை

வட்டக் கல்

முக்கோணம்

வடிவுப் பண்புத் தொகை

அளவுப் பண்புத் தொகை

இன்சொல் சுவைப் பண்புத் தொகை

பணை என்னும் உரிச்சொல் உணர்த்தும் பண்புகள் :

பணை என்னும் உரிச்சொல் பிழை, பெருப்பு (பருத்தல்)

ஆகிய குறிப்புகளையுணர்த்தும்.