உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்

(எ.டு) சூத்திரத்தாற் பிண்டமாயது

ஒத்தினாற் பிண்டமாயது

அதிகாரத்தால் பிண்டமாயது

பிறிதின் கிழமைப் பொருள் :

137

இறையனார் களவியல்

பன்னிருபடம்

பொருளதிகாரம்

தன்னின் வேறாய பொருள் பிறிதின் கிழமைப் பொருளாகும். அது பொருள், இடம், காலம் என மூவகைப்படும்.

(எ.டு)

பிறவினை :

முருகனது வேல் பொருட்பிறிதின் கிழமை

முருகனது மாலை இடப் பிறிதின் கிழமை காலப் பிறிதின் கிழமை

மாரனது வேல்

பிறவினையாவது தன்னெழுவாய்க் கருத்தா வல்லாத பிற கருத்தாவின் தொழிலை உணர்த்தி நிற்கும் முதனிலை அடியாகத் தோன்றும் வினையாகும். இப்பிறவினை ஏவுதற் கருத்தாவின் வினையெனப்படும்.

(எ.டு) அழகன் நடப்பித்தான்

பிறவினை யீறுகள் :

வி, பி, கு, சு, டு, து, பு, று என்னும் எட்டும் பிறவினை யீறுகளாகும்.

(எ-டு) செய்வி, நடப்பி, போக்கு, பாய்ச்சு, உருட்டு, நடத்து, எழுப்பு, துயிற்று.

புலம்பு என்னும் உரிச்சொல் உணர்த்தும் பண்பு :

புலம்பு என்னும் உரிச்சொல் தனிமை என்னும் பண்பை யுணர்த்தும்.

(எ.டு)

"புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி”

புல்லின் உறுப்புகள் :

தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ், பாளை, ஈர்க்கு, குலை, காய், பழம், செதிள், தோல், விழுது என்பன புற்களின் உறுப்பு களாகும்.