உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

இளங்குமரனார் தமிழ்வளம்

4

‘புரை’ என்னும் உரிச்சொல் உணர்த்துங் குறிப்பு :

புரை என்னும் உரிச்சொல் உயர்பு என்னும் பண்பை

யுணர்த்தும்.

(எ-டு) "புரையமன்ற புரையோர் கேண்மை

புறந்தருதல் என்னுங் குறிப்புணர்த்தும் உரிச்சொற்கள் :

பிணையும் பேணும் என்ற உரிச்சொற்கள் புறந்தருதல் என்னுங் குறிப்புணர்த்தும்.

(எ.டு) "அரும்பிணை யகற்றி வேட்ட ஞாட்பினும்”

66

அமரர்ப் பேணியும் ஆகுதி யருத்தியும்

புனிறென் கிளவியுணர்த்துங் குறிப்பு :

""

புனிறென் கிளவி ஈன்றணிமையாகிய குறிப்புணர்த்தும். (எ.டு) “புனிற்றாப் பாய்ந் தெனக் கலங்கி

பூட்டுவிற் பொருள் கோள் :

""

செய்யுள் முதலிலும் இறுதியிலும் நிற்குஞ் சொற்கள் தம்முள் பொருள் நோக்குடன் அமைதல் ‘பூட்டுவிற் பொருள் கோள்' எனப்படும்.

(எ.டு)

"திறந்திடுமின் தீயவை பிற்காண்டும் மாதர்

இறந்துபடின் பெரிதாம் ஏதம்

உறந்தையர் கோன்

தண்ணாரமார்பன் தமிழர் பெருமானைக்

கண்ணாரக் காணக் கதவு” இதில் திறந்திடுமின் கதவு என நோக்கிற்று.

பெண் பாலை உணர்த்தும் இளமைப் பெயர்கள் :

பேடை, பெடை, பெட்டை, பெண், மூடு, நாகு, பிணவு, பிடி, கடமை, அளகு, மந்தி, பாட்டி, பிணவு என்ற பதின் மூன்றும் பெண்பாலை உணர்த்தும் இளமைப் பெயர்களாகும். பெயர் விகுதிகள் :

அன், ஆன், மன், மான், ன், அள், ஆள், இ, ள், அர், ஆர், மார், கள், ர், து, அ, வை, வ், தை, கை, பி, முன், அல் என்னும் இருபத்து மூன்றும் பெயர் விகுதிகளாகும்.