உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்

139

(எ-டு)

குழையன், வானத்தான், வடமன், கோமான், பிறன், குழையள், வானத்தாள், அரசி, பிறள், குழையர், வானத்தார், தேவிமார், கோக்கள், பிறர், அது, குறுந்தாளன், அவை, அவ், எந்தை, எங்கை, எம்பி, எம்முன், தோன்றல்

பெயரெச்சம் :

பால் காட்டும் முற்று விகுதி பெறாத குறைச் சொல்லாய்ப் பெயரைக் கொண்டு முடியும் வினை பெயரெச்சமாகும்.

(எ-டு) வந்த வளவன்

பெயரெச்சங் கொள்ளும் பெயர்கள் :

வினை முதற் பெயர் கருவிப் பெயர், இடப் பெயர், தொழிற் பெயர், காலப் பெயர், செயப்படு பொருட் பெயர் என்னும் அறுவகைப் பெயர்களும் பெயரெச்சங் கொள்ளும் பெயர்களாகும்.

(எ-டு) உண்ட வளவன் - வினைமுதற் பெயர்

உண்ட கலம்

உண்ட இல்லம்

கருவிப் பெயர்

இடப் பெயர்

ணட ஊண்

_

தொழிற் பெயர்

உண்ட நாள்

காலப் பெயர்

உண்ட சோறு - செயப்படு பொருட் பெயர்

பெண்பாற் படர்க்கை வினைமுற்று :

அள், ஆள் என்கின்ற இரண்டு விகுதியையும் இறுதியிலுடைய ய மொழிகள் உயர்திணைப் பெண்பாற் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றும் குறிப்பு முற்றும் ஆம்.

(எ-டு)

இறப்பு

எதிர்வு

நிகழ்வு

குறிப்பு

நடந்தனள்

நடக்கின்றனள் நடப்பள்

குழையள்

நடந்தாள்

நடக்கின்றாள்

நடப்பாள்

குழையாள்

பெயர் :

இடுகுறிப் பெயரும், காரணப் பெயரும் ஆகிய இரண்டும் பல பொருள்களுக்குப் பொதுப் பெயராகவும் ஒவ்வொரு