உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

இளங்குமரனார் தமிழ்வளம் 4

பொருளுக்கே சிறப்புப் பெயராகவும் வருவனவாம். (தமிழில் டுகுறி என ஒன்றில்லை; ஆயினும் நன்னூலார் இடுகுறி குறித்தார்)

பொதுமொழி :

ஒரு மொழியாக நின்று ஒரு பொருளைத் தந்தும், அதுவே தாடர் மாழியாக நின்று பல பொருளைத் தந்தும் இவ்விரண்டுக்கும் பொது மொழியாக நிற்பதும் பொது மொழியாகும்.

(எ.டு) தாமரை

இது ஒரு மொழியாக நின்று ஒரு பொருளைத் தந்தது. அதுவே தா + மரை (தாவுகின்ற மான்) வேறு பொருளைத் தந்ததையும் காண்க.

பொருள் கோள்களின் வகை :

யாற்று நீர்ப் பொருள் கோள், மொழி மாற்றுப் பொருள் கோள், நிரனிறைப் பொருள் கோள், பூட்டுவிற் பொருள் கோள், தாப்பிசைப் பொருள் கோள், அளைமறி பாப்புப் பொருள் கோள், கொண்டு கூட்டுப் பொருள் கோள், அடிமறி மாற்றுப் பொருள் கோள் என பொருள் கோள் எட்டு வகைப்படும். பொருளாகு பெயர் :

முதற் பொருளின் பெயர் அதன் சினைப் பொருளுக்கு ஆவது பொருளாகு பெயராகும்.

(எ.டு) “தாமரை புரையுங் காமர் சேவடி என்றதில் தாமரை என்ற தண்டின் பெயர் அதன் மலர்க்கு ஆயிற்று.

பொற்பு என்னும் உரிச் சொல் உணர்த்தும் பண்பு :

பொற்பு என்னும் உரிச் சொல் பொலிவு என்னுங் குறிப்பையுணர்த்தும்.

(எ-டு) "பெருவரையடுக்கம் பொற்ப

மக்கட்கு உரிய இளமைப் பெயர்கள் :

>>

குழவி, மகவு என்னும் இரண்டு இளமைப் பெயர்களும் மக்கட்கு வழங்குவனவாம். பிள்ளை எனப் பெருக வழங்கும் பெயர் (ஆண்பிள்ளை, பெண்பிள்ளை) தொல்காப்பியர் மக்கட்கு உரியதாக வழங்கவில்லை. ஆனால் பிள்ளையாட்டு, பிள்ளை நிலை என்பவை மகப் பெயராவன. அவற்றைத் துறைப்படுத்துக் கூறுகிறார்.