உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்

மதவென்னும் உரிச் சொல் உணர்த்துங் குறிப்பு :

141

மதவென்னும் உரிச் சொல் மடனும், வலியும், மிகுதியும், வனப்புமாகிய குறிப்புகளையுணர்த்தும்.

(எ.டு) ‘பதவு மேய்ந்த மதவு நடை நல்லான்

மந்திரம் :

) :

'கயிறிடு கதச் சேப் போல மதமிக்கு'

‘மதவிடை’

'மாதர் வாண்முகம் மதைஇய நோக்கே

>

நிறைந்த மொழியையுடைய மாந்தர் தமதாணையாற் சொல்லப்பட்ட மறைச் சொல்லே மந்திரமாகும்.

மரபு :

உலக வழக்கிலுஞ் செய்யுள் வழக்கிலும் எப்பொருட்டு எப்பெயர் வழங்கி வருமோ அப்பொருளை அச்சொல்லாற் கூறுவது மரபாகும்.

(எ.டு)

யானை மேய்ப்பான்

ஆடு மேய்ப்பான்

பாகன் இடையன்

ஆனையிலண்டம்

ஆட்டுப் புழுக்கை

குதிரைக் குட்டி பசுக்கன்று

மரத்தின் உறுப்புகள் :

இலை, முறி, தளிர், தோடு, சினை, குழை, பூ, அரும்பு, காய், பழம், தோல், செதிள், விழுது என்பன மரத்தின் உறுப்புகளாகும். மரூஉ :

து இயல்பு வழக்கு வகைகளுள் ஒன்று. தொன்று தொட்டு வருதலின்றி இடையில் எழுத்துக்கள் தோன்றியும், திரிந்தும், கட்டும், இலக்கணம் சிதைந்து தானே மருவி வழங்குவது.

(எ.டு) அருமருந்தன்ன

பாண்டியனாடு

அருமந்த

பாண்டி நாடு