உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

இளங்குமரனார் தமிழ்வளம்

4

ஆயிற்று - ஆச்சு

தஞ்சாவூர் தஞ்சை

‘மல்லல்' என்னும் உரிச்சொல் உணர்த்தும் பண்பு :

மல்லல் என்னும் உரிச்சொல் வளம் என்னும் பண்பையுணர்த்தும்.

(எ.டு) ‘மல்லன் மால்வரை

‘மற்று’ என்னும் இடைச் சொல் :

மற்று என்னும்

டைச்

சால் வினைமாற்றுப் பொருளையும் அசைத்து நிற்றற் பொருளையும் வேறென்னும் பொருளையுந் தரும்.

1.

(எ.டு)

""

"மற்றறிவாம் நல்வினை யாமிளைய மென்னாது இதில் நல்வினையை விரைந்தறிவாம் என்னும் வினையை மாற்றி இனிமேல் விரையாமல் அறிவாம் என்னும் வினையைத் தருவதால் - வினைமுற்று.

2. 'மற்றென்னை ஆள்க'

அசை நிலை.

66

3.

இதில், வேறு பொருளின்றி நிற்றலால்

ஊ ஊழிற் பெருவலி யாவுள மற் றொன்று, சூழினும்

தான் முந்துறும்” இதில் மற்றொன்று என்பது ஊழ்வினைக்கு மறுதலை யாவதோர் உபாயமெனப் பொருள் தருதலால் பிறிது.

‘மற்றைய' என்னும் இடைச் சொல் :

மற்றையது எனப் பெயர்க்கு முதனிலையாய் வரும் மற்றை என்னும் இடைச்சொல், முன் சுட்டிய பொருளை ஒழித்து அதற்கு இனமான பொருளைக் குறிக்கும்.

(எ-டு) இரண்டு ஆடை உள்ளவிடத்து ஒன்றைக் கண்டு வேண்டாதவன் மற்றையது கொண்டு வா என்றால், அதற்கு இனமாகிய ஆடையையே குறித்து நிற்றலை அறிக.

‘மறி’ என்னும் இளமைப் பெயர் பெறுவன :

ஆடு, குதிரை, புள்ளி மான், உழை, புல்வாய் என்னும் ஐந்தும் மறி, குட்டி என்னும் இளமைப் பெயர்களைப் பெறும்.