உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னிடைச் சொல் :

சொல்

143

மன்னென்னு மிடைச் சொல் அசைத்து நிற்றற் பொருளிலும், ஒழிந்த சொற் பொருளிலும், ஆக்கப் பொருளிலும், கழிதற் பொருளிலும், மிகுதிப் பொருளிலும், நிலை பெறுதற் பொருளிலும் வரும்.

66

""

(எ-டு) அது மற் கொண்கன்றேரே அசைநிலை

66

""

கூரியதோர் வாண்மன் ஒழியிசை

""

“பண்டு காடுமன் ஆக்கம்

""

“சிறியகட் பெறினே யெமக்கீயுமன்னே கழிவு

“எந்தை யெமக்கருளுமன்

மிகுதி

""

“மன்னாவுலகத்து மன்னியதுபுரிமோ நிலைபேறு

‘மா’ என்னும் இடைச் சொல் :

மா என்னும் சொல் வியங்கோளிடத்து வருகிற அசைச் சொல்லாகும்.

(எ.டு) ‘விற்கை யுண்கமா கொற்கையோனே’

என்னும் வியங்கோளை அடுத்து அசையால் வந்தது.

‘மாதர்’ என்னும் உரிச் சொல் உணர்த்துங் குறிப்பு :

இதில் உண்க

மாதர் என்னும் உரிச்சொல் காதல் என்னுங் குறிப்புணர்த்தும்.

(எ.டு)

'மாதர் நோக்கு’

மாலை என்னும் உரிச்சொல் உணர்த்தும் பண்பு :

மாலை என்னும் உரிச்சொல் இயல்பாகிய குறிப்புணர்த்தும். (எ-டு) 'இரவரன் மாலையானே'

முகத்தலளவையாகு பெயர் :

முகந்து அளக்கின்ற நாழி, குறுணி, கலம் 'லிட்டர்’ முதலிய முகுத்தலளவைப் பெயர்கள் அவ்வளவைக்குறிக்காமல், பொருளைக் குறிப்பது முகத்தலளவையாகு பெயர்.

(எ.டு) நாழி கொடு

என்றதில், நாழி என்னும் முகத்தலளவைப் பெயர் அவ்வளவைக் கொண்ட பொருளுக்கு ஆயிற்று.