உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

இளங்குமரனார் தமிழ்வளம்

4

முதல் வேற்றுமை :

முதல் வேற்றுமையினது உருபாவது ஐ முதலிய உருபுகளை ஏற்றுத் திரிதலில்லாத பெயராகும். வினையையும், பெயரையும், வினாவையுங் கொள்ள வருதல் அவ்வுருபினது பொருள் நிலையாம்.

முதனிலைத் தொழிற்பெயர் :

தொழிற்பெயர் விகுதி குறைந்து முதனிலை மாத்திரம் நின்று தொழிற்பெயர்ப்பொருளைத் தருவது முதனிலைத்

தொழிற்பெயராகும்.

(எ.டு) கெடுவான்

முதனிலை திரிந்த தொழிற்பெயர் :

தொழிப்பெயர் விகுதி குறைந்து முதனிலை திரிந்து நின்று தொழிற்பெயர்ப் பொருளைத்தருவது முதனிலை திரிந்த தொழிற்பெயராகும்.

(எ.டு) பேறு பெற்றான்

மும்மடியாகுபெயர் :

கார் என்னும் கருநிறத்தின் பெயர் அதனையுடைய முகிலை உணர்த்தும்போது ஆகுபெயர், அம்முகில் பெய்யுங்காலத்தை உணர்த்தும்போது இருமடியாகுபெயர்; அப்பருவத்தில் விளையும் நெற்பயிரை உணர்த்தும்போது மும்மடியாகுபெயர்.

மடிதல் = மீளவருதல்.

முரஞ்சு என்னும் உரிச்சொல் உணர்த்துங் குறிப்பு :

முரஞ்சு என்னும்

குறிப்பையுணர்த்தும்.

முரஞ்சு முதிர்வாகும்.

உரிச்சொல் முதிர் என்னுங்

முழுதும் என்னும் உரிச்சொல் உணர்த்துங்குறிப்பு :

முழுதும் என்னும் உரிச்சொல் எஞ்சாமை என்னுங் குறிப்பையுணர்த்தும்.

(எ.டு) "மண்முழுதாண்ட

""