உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுத்தொடர் மொழி :

சொல்

145

எழுவாயும் பயனிலையுஞ் செயப்படுபொருண் முதலியவை களோடு கூடியாயினும் கூடாதாயினும் முடிவுபெற்று நிற்பது முற்றுத்தொடர் மொழியாகும்.

‘முனைவு’ என்னும் உரிச்சொல் உணர்த்துங்குறிப்பு :

முனைவு என்னும் உரிச்சொல் சினம் என்னுங் குறிப்புணர்த்தும்.

(எ.டு) ‘சேற்று நிலைமுனைஇய செங்கட் காரான்

முன்னிலை அசைச்சொற்கள் :

மியா, இக, மோ, மதி, அத்தை, இத்தை, வாழிய, மாள, ஈ, யாழ என்னும் பத்தும் முன்னிலை மொழியைச் சார்ந்து வரும் அசை நிலையிடைச் சொற்களாகும்.

முன்னிலை ஏவற்பன்மை வினைமுற்று :

மின் விகுதியை இறுதியிலுடைய மொழிகள் முன்னிலை ஏவற்பன்மை வினைமுற்றாம். ஏவற்பன்மைக்கு ஈர், உம் விகுதிகளும் புதியன புகுதலால் வரும்.

(எ.டு) உண்மின், உண்ணீர், உண்ணும்.

முன்னிலைப் பெயர்கள் :

முன்னிலைப் பெயர்கள், நீ, நீர், நீயிர், நீவிர், எல்லீர், என்பனவாம். இவற்றுள் நீ முன்னிலையொருமையைக் குறிக்கும். மற்றவை பன்மையைக் குறிக்கும். இம்முன்னிலைப் பெயர்கள் இருதிணை யாண்பால், பெண்பால்களுக்குப் பொதுவாகி வருவனவாம்.

(எ-டு) நீ நம்பி, நீ நங்கை, நீ பூதம்

முன்னிலையொருமை

நீர்மைந்தர், நீர்மகளிர், நீர் பூதங்கள் முன்னிலைப்பன்மை

முன்னிலைப் பன்மை வினைமுற்று :

இர், ஈர் என்னும் விகுதிகளை இறுதியிலுடைய வினைச் சொற்கள், முன்னிலைப் பன்மைத் தெரிநிலைவினைமுற்றுங் குறிப்பு வினைமுற்றுமாம்.