உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

(எ.டு)

இ.தெரி

உண்டனிர்

உண்டீர்

இளங்குமரனார் தமிழ்வளம்

4

நி.தெரி

எ.தெரி

குறிப்பு

உண்கின்றனிர்

உண்டிடீர்

குழையினிர்

உண்கின்றீர்

உண்பீர்

குழையீர்.

முன்னிலை வினை :

தன்மை படர்க்கை வினைகளுக்கு இனமாய், மூன்று காலத்திற்குந் தனித்தனி வருவதாய் ஏவற்பொருள் தோன்றாததாய் முன்னின்றானது தொழிலையுணர்த்தும் வினை முன்னிலை வினையாகும்.

(எ.டு) நடந்தாய், நடக்கின்றாய், நடப்பாய்.

முன்னிலை யொருமை வினை முற்று :

ஐ, ஆய், இ என்னும் விகுதிகளை இறுதியிலுடைய வினைச் சொற்களும், விகுதி பெறாமலும், பெற்றும் ஏவலில் வருகிற இருபத்து மூன்று ஈற்றுமொழிகளும், ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால் என்னும் மூன்றுக்கும் பொதுவாகிய முன்னிலை யொருமைத் தெரிநிலைவினைமுற்றும் குறிப்பு வினைமுற்றும் ஆம்.

(எ-டு)

இ.தெரி

உண்டனை

நி.தெரி

உண்கின்றனை

எ.தெரி உண்பை

குறிப்பு

குழையினை

உண்டாய்

உண்கின்றாய்

உண்பாய்

குழையாய்

உண்டி

உண்ணாநின்றி

சேறி

வில்லி

முன்னம் :

இவ்விடத்து இம்மொழியை இவர்க்குச் சொல்லத் தகுமெனக் குறித்து அவ்விடத்து அவர்க்கு அம்மொழியை உரைப்பது முன்னமாகும்.

மூவகைப் பெயர்க்கும் பொதுவான விளியுருபு :

விளிக்கப் படுகின்ற உயர்திணைப் பெயர், பொதுப் பெயர், அஃறிணைப்பெயர் ஆகிய மூவகைப் பெயர்களிடத்தும் இயல்பாதலும் ஏகாரம் மிகுதலும், இகரம் ஈகாரமாகத் திரிதலும் பெரும் பாலும் விளியுருபுகளாக வரும்.