உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்

யாணர் என்னும் உரிச்சொல் உணர்த்துங்குறிப்பு :

149

யாணர் என்னும் சொல் (வாரி) புதிதாகப் படுதலாகிய குறிப்புணர்த்தும். யாணர்- புதுவருவாயினர்

(எ-டு) “மீ னொடு பெயரும் யாணரூர

""

‘யாணு' என்னும் உரிச்சொல் உணர்த்துங்குறிப்பு :

யாணு என்னும் உரிச்சொல் கவின் என்னுங்குறிப்புணர்த்தும். (எ.டு) யாணது பசலை’

யாற்று நீர்ப் பொருள்கோள் :

திரும்பாமலே ஒரே முகமாக ஓடுகின்ற ஆற்று நீரின் ஓட்டம் போல, சொற்கள் முன்பின்னாக மாறாமல் நேராகவே பொருள் கொள்ளப்படுவது யாற்றுநீர்ப் பொருள் கோளாகும். (எ.டு) “சொல்லருஞ் சூல்பசும் பாம்பின் தோற்றம்போல் மெல்லவே கரு இருந்(து) ஈன்று மேல் அலார்

செல்வமே போல் தலை நிறுவித் தேர்ந்த நூல் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே”

சொல்லை மாறிக்கூட்டல் இன்றி இயல்பான ஓட்டத்தில் பொருள் கொள்ளக் கிடப்பது.

வம்பு என்னும் உரிச்சொல் உணர்த்தும் பண்பு :

வம்பு என்னும் உரிச்சொல் நிலையின்மை என்னுங் குறிப்பை யுணர்த்தும்.

(எ.டு)

வம்புமாரி

வய என்னும் உரிச்சொல் உணர்த்துங்குறிப்பு :

வயவென்னும் உரிச்சொல் வலிமை என்னும் பண்பை

யுணர்த்தும்.

(எ-டு) துன்னருந்துப்பின் வயமான்'

வயாவென் கிளவியுணர்த்துங் குறிப்பு :

வயா வென்னும் உரிச்சொல் வேட்கைப் பெருக்கம் என்னுங் குறிப்பையுணர்த்தும்.

(எ-டு) 'வயாவுறு மகளிர்'