உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

இளங்குமரனார் தமிழ்வளம்

4

மூன்றாம் வேற்றுமையின் உருபுகள் :

ஆல், ஆன், ஒடு, ஓடு என்பன மூன்றாம் வேற்றுமையின் உருபுகளாகும். ஆல், ஆன் உருபுகள் நிற்றற்குரியவிடத்துக் கொண்டென்பதும், ஓடு, ஒடு உருபுகள் நிற்றற்குரியவிடத்து உடனென்பதும் சொல்லுருபுகளாக வரும்.

மூன்றாம் வேற்றுமையின் பொருள் :

ஆல், ஆன் என்னும் இரண்டுருபுகளும், தம்மையேற்ற பெயர்ப்பொருளைக் கருவிப் பொருளாகவும், கருத்தாப் பொருளாகவும் வேறுபடுத்தும். அப்படி வேறுபட்ட கருவிப் பொருளுங்கருத்தாப் பொருளும் இவ்வுருபுகளின் பொருள் களாகும். ஒடு, ஓடு என்னும் இரண்டுருபுகளும் தம்மையேற்ற பெயர்ப்பொருளை உடனிகழ்ச்சிப் பொருளாக வேறுபடுத்தும். அவ்வாறு வேறுபட்ட உடனிகழ்ச்சிப் பொருளே இவ்வுருபு களின் பொருளாகும்.

(எ.டு) வாளால் வெட்டினான் வாளான் வெட்டினான்

அரசனாலாகிய கோயில்

அரசனானாகிய கோயில்

} கருவி

கருத்தா

உடனிகழ்ச்சி

மைந்தனொடு தந்தை வந்தாத }

மைந்தனோடு தந்தை வந்தான்

மொழிமாற்றுப் பொருள்கோள் :

செய்யுளில் கூறப்படும் பொருளுக்குப் பொருத்தமான மொழிகளை ஒரே அடிக்குள் முறை மாற்றி வழங்குதல் மொழி மாற்றுப் பொருள் கோள் எனப்படும்.

(எ-டு) ‘சுரையாழ அம்மி மிதப்ப வரையனைய

யானைக்கு நீத்து முயற்கு நிலை என்ப

கானக நாடன் சுனை

இச்செய்யுளில்

66

>

‘அம்மி ஆழ சுரை மிதப்ப வரையனைய

யானைக்கு நிலை முயற்கு நீத்து என்ப

""

கானக நாடன் சுனை என்று மொழி மாற்றிப்

பொருள் கொள்ள வேண்டும்.