உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள்

177

இரங்கல் - தலைவன் பிரிந்தபொழுது தலைவி வருந்துதலும், அது கண்டு பாங்கி புலம்புதலும், தலைவியைப் புணராத தலைவன் வருந்துதலுமாம். வன்புறை -தலைவியைப் பாங்கி இடித் துரைத்தல். இற்செறிப்பு உணர்த்தல் - தலைவியை வெளியில் போகாதவாறு வீட்டின் கண்ணே செறித்தமையைப் பாங்கித் தலைவனுக்குணர்த்தல்.

ஒருசார் பகற்குறியின் விரி :

தலைவன் தலைவியைப் புணராது சென்றவிடத்துத் தலை வியைக் காமநோய்வருத்த மாலைப் பொழுதை நோக்கியும், பாங்கியை நோக்கியும், தன்னுள்ளத்தை நோக்கியும், வருந்திக் கூறுதல். இவ்வாறு தலைவி கூறியதைக் கேட்ட பாங்கி வருந்துதல். தலைவன் தலைவியைச் சந்திக்காமல் நாழிகை நீட்டித்தவிடத்துத் தலைவி வருந்திக் கூறுதல். பாங்கி, நீ இவ்வாறு வருந்துவது முறைமையன்று எனத் தலைவியை இடித்துரைத்தல். இவ்வாறு இடித்துக் கூறிய பாங்கி முன்னால் நிற்க அவள்மேல் வெறுப்பால் அவளை நோக்கிக் கூறாது புறமொழியாகக் கூறுதல். வெறுப்பால் முன்னிலைப் புறமொழி கேட்ட பாங்கி தலைவியை யுபசரித் தலால் வெறுப்பு நீங்கிப் பாங்கி யொடு தலைவி கூறுதல். பாங்கி, நீ இவ்வாறு வருந்தினால் அவ்வருத்தத்தால் நலனழியும், நலனழியவே அன்னைக்கு ஐயந்தோன்றும். அதனால் இற்செறிப்பு வரும். மற்றவர் மணம் பேசி வந்தாலும் வருவர், அதனால் கற்புக்கெடும் என்று தலைவியை அச்சமுறுத்திக் கூறுதல்.

தலைவன் விட்டு நீங்கற்கு அருமையைத் தலைவி நினைந்து தன்னுள் வருந்திக் கூறுதல். தலைவன் வரவைப் பாங்கி தலைவிக்கு அறிவித்தல். தலைவன் வேலிப்புறமாகக் குறியிடத்து வரத் தோழி தங்களுக்குள்ள இற்செறிப்பை அறிவுறுத்தக் கூறுதல். தலைவன் முன்னிலையாக நிற்கத் தோழி தலைமகனைப் பார்க்காதவள் போலப் புறமொழியாய்ப் பறவைகளை நோக்கிக் கூறுவாள் போன்று இற்செறிப்பை அறிவுறுத்தல். பாங்கி தலைமகனைக் குறிவிலக்கல். இவ்வாறு பாங்கி குறிவிலக்கினா ளாயினும் எம்மை மறவாமை வேண்டுமென்று கூறுதல். தலைவியைத் தலைவன் புணராமையால் தன் நெஞ்சொடு