உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

இளங்குமரனார் தமிழ்வளம்

4

வொழுக்கம் பிறரால் அறியப்படும் எனக் கூட்டத்தின் அகன்று ஒழுகுதல்; புணர்ச்சியை விலக்குதல்; தூதுவிட்டபொழுது சினங் கொள்ளாமை; உறங்கிப் பொருந்துதல்; காதல் அளவு கடந்து வருதல்; உள்ளக் கருத்தினைப் புறத்தே கூறாது மறைத்திருத்தல், தெய்வத்தினை அஞ்சுதல்; அறத்தினைத் தேர்ந்து தெளிதல்; தலைமகனிடத்து இல்லாத குறிப்பினை அவன் மாட்டு இருப்பதாக யெண்ணி வெறுத்தல்; தலைவன் செய்கின்ற தலையளியை வெறுத்தல்; மனநிகழ்ச்சி யுண்மையைக் கூறுதல்; பொழுதினைமறுத்தல்; தலைமகன் மாட்டு அருள் புலப்பட நிற்கும் நிலை; அன்பு வெளிப்பட நிற்றல்; பிரிவினைப் பொறாமை; களவொழுக்கத்தைக் கூறிய புறஞ்சொல்; அதற்கு உள்ளம் நாணுதல் ஆகிய யாவும் ஐந்திணையில் மனன் அழியாத நிலையில் நிகழும் மெய்ப்பாடுகளாகும்.

ஐயம் :

தலைமகன் தலைமகளைத் தனியே நல்வினை வயத்தால் எதிர்ப்பட்டவிடத்து, அவள் வடிவும், அவளை அவன் கண்ட இடமும் சிறப்புடைய ஆய காலத்துத் தலைமகனிடத்து, 'இவள் மக்களுள்ளாள் அல்லள், தெய்வமோ?” எனத் தலைவி மாட்டு ஐயம் நிகழும்.

எடு :-

66

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கணங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.

ஒருசார் பகற்குறி :

>>

பகற் குறியிடத்துத் தலைவியைப் புணர்ந்து சென்ற தலைமகன் மற்றை நாள் தன் வேட்கை மிகுதியால் பகற் குறியிடத்து வந்து நிற்கப், பாங்கி குறியிடத்துத் தலைவியைச் செலுத்தாது மறுத்துக்கூறத் தலைவன் வருந்திச் செல்லுதல் ஒரு சார் பகற்குறியாகும். இதனை ஒரு கூற்றுப்பகற்குறி எனவுங் கூறுவர்.

ஒரு சார் பகற்குறியின் வகை :-

இரங்கல், வன்புறை, இற்செறிப்பு ஆகிய மூன்றும் ஒரு சார் பகற்குறியின் வகைகளாகும்.