உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள்

ஐந்திணைக்கும் உரிய பொருள்கள் :

175

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணைகளும், முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகிய மூன்று பொருளானுஞ் சொல்லப்படும்.

ஐந்திணை ஒழுக்கத்திற்குப் பொருந்தாதவர் :

பிறருக்கு அடிமைத் தொண்டு செய்து வாழ்வோரும், பிறர் ஏவல் வழிநின்று செயல் செய்பவரும், பிறரால் ஏவுதற்குரியாரும் ஐந்திணை ஒழுக்கத்திற்குப் பொருந்தார். அவர்கள் அகப்புறத் திணையாகிய கைக்கிளைக்கும், பெருந்திணைக்கும் உரியராவர். மேலும் அறம், பொருள், இன்பம் கெட மகளிரைக் காதலிக்கும் தலைமக்களும் அகப்புறத்திணையாகிய கைக்கிளைக்கும் பெருந் திணைக்கும் உரியவராவர். ஐந்திணை ஒழுக்கத்திற்கு உரியவர் எவர்க்கும் எதற்கும் அடிமைப்படாத் தம் முரிமையராய் இருந்தால் அன்றி அவர் வாழ்வு சிறப்புறாது என்பது கொண்ட விதி இஃதாம்.

ஐயந் தெளிதல் ;

தலைவியின் கூந்தலில் வண்டுகள் மொய்த்தலாலும், அணிகள் அணிந்திருப்பதாலும், மார்பு, தோள் முதலியவற்றில் பச்சைக் குத்தியிருப்பதாலும், அசைதலாலும், கண்இமைத் தலாலும், ஆண்மக்களைக் கண்டு அஞ்சுதலாலும், கால்கள் நிலத்தில் தோய்தலாலும், வியர்த்தலாலும், நிழலாடுதலாலும், மாலை வாடுதலாலும் தலைமகன் ஐயம் நீங்கி இவள் மானிட மகளே என்று துணிவான்.

எடு :-

66

திருநுதல் வேரரும்புந் தேங்கோதை வாடும் இருநிலஞ் சேவடியுந் தோயு - மரிபரந்த போகித ழுண்கணு மிமைக்கும்

ஆகு மற்றிவ ளகலிடத் தணங்கே.’

""

ஐந்திணையில் மனனழியாத நிலையில் நிகழும் மெய்ப்பாடுகள் : களவு இடையீடு பட்டவிடத்து வருந்தாது இவ்வாறாகி நின்றதெனத் தலைவனை இடித்துக் கூறுதல்; வெறுப்பினைப் பிறர்க்குத் தோன்றாதவாறு உடலின் கண்ணே நிறுத்தல்; கள