உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

இளங்குமரனார் தமிழ்வளம்

4

எண்வகை மணம் (ஆரியவழிப் பட்டது) :

பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், அசுரம், இராக்கதம், பைசாசம் என்பன ஆரிய எண் வகை மணங்களாகும். இவற்றுள் பிரமமாவது-நாற்பத்தெட்டு ஆண்டுகள் பிரமச்சரியங்காத்தவனுக்குப் பன்னிரண்டு யாண்டு பருவத்தளாய்ப் பூப்பு அடைந்த எழிலார் இளநங்கையை இரண்டாம் பூப்பு எய்தாமைக்கு முன்பே அணிகலன் அணிந்து தானமாகக் கொடுப்பதாம். பிரசாபத்தியமாவது-தலைமகன் குரவர் வேண்டத் தலைமகள் குரவர் மறாது உடன்பட்டு அவர்கள் கொடுத்த பரிசுத் தொகைக்கு இரண்டு மடங்காகக் கொடுத்துத் தன்மகளையும் ஒப்பனை செய்து தீமுன்னர்க் கொடுப்பதாம். தெய்வமாவது வேள்வியாசிரியனுக்குக் கன்னியை அலங்கரித்துத் தீ முன்னர்க் கொடுப்பதாம். ஆரிடமாவது ஒன்றானும் இரண்டானும் ஆவும் ஆனேறும் வாங்கிக் கொண்டு கன்னியை ஒப்பனை செய்து தீமுன்னர்க் கொடுப்பதாம்.

காந்தருவமாவது, கொடுப்பாரும் கேட்பாரு மின்றித் தலைமகனுந் தலைமகளுந் தனியிடத்தெதிர்ப் பட்டுத்தாமே கூடு வதாம். அசுரமாவது தலைமகட்குப் பொன்பூட்டிச் சுற்றத் தார்க்கு வேண்டுவன கொடுத்துக் கொள்வது இராக்கதமண மாவது தன்னினும் தமரினும் பெறாது வலிதிற் கொள்வதாம். பைசாசமாவது மூத்தோர், கள்ளுண்டுகளித்தோர், துயின்றோர் ஆகியவர்களிடத்துப் புணர்தலும், இழிந்தவளை மணஞ்

செய்வதும் பிறவுமாம்.

இம்மணங்களுள் பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம் ஆகிய நான்கும் பெருந்திணைக்குரிய மணங்களாகும். காந்தருவம் ஐந்தினைக்குரியது. அசுரம், இராக்கதம், பைசாசம் ஆகிய மூன்று மணங்களும் கைக்கிளைக்கு உரியனவாம்.

ஐந்திணைக்குமுரிய கைகோள் :

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணையிடத்துக் களவும், கற்புமென இரண்டொழுக்கம்

நிகழும்.