உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள்

173

தமர் சினந்து குழாங் கொண்டு பின்சேறலைத் தலைவி கண்டு தலைவற்குணர்த்தலும், தலைவியின் தமர் பின் வருதலை யறிந்து தலைவன் தலைவியை விடுத்துச் செல்லுதலும், தமருடன் செல்லுந்தலைவி தலைவன் புறங்காட்டிப் போதலை நோக்கிக் கவலைப்பட்டுத் தேறுதலும் ஆகிய ஆறும் உடன்போக்கிடை யீட்டின் விரிகளாகும்.

உ உரிப் பொருள் :

புணர்தலும், புணர்தல் நிமித்தமும், பிரிதலும், பிரிதல் நிமித்தமும், இருத்தலும், இருத்தல் நிமித்தமும், ஊடலும், ஊடல் நிமித்தமும், இரங்கலும், இரங்கல் நிமித்தமும் என்ற பத்துவகையினையுடையதாம்.

உவகை :

இது எண்வகை மெய்ப்பாடுகளுள் ஒன்று. செல்வநுகர்ச்சி, மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களால் நுகரும் நுகர்ச்சி, மகளிரொடு புணர்தல், சோலையும் ஆறும் புகுந்து விளையாடும் விளையாட்டு ஆகிய நால்வகையானும் உவகை தோன்றும்.

உள்ளப் புணர்ச்சி நிகழுங் காலம் :

பழிபாவங்களைக் கண்டு அஞ்சுதலும் (குற்றந்தருஞ் செயல் களைச் செய்யாமையும்) அறிவுடையவனாக இருத்தலும் தலை மகனு க்கு நிலைபெற்ற குணங்களாதலாலும், அச்சம், நாண், பேதமை ஆகியமூன்றுந் தலைமகளுக்கு நிலைபெற்ற குணங் களாதலானும் உள்ளப் புணர்ச்சி, மெய்யுறுபுணர்ச்சி என்னும் இருவகைப் புணர்ச்சியுள்ளும் உள்ளப் புணர்ச்சி முன்னர் நிகழும்.

இவற்றுள், அச்சமென்பது காணாததொன்று கண்டாற் பெண்டிரிடத்து நிகழ்வது. நாணம் என்பது பெண்டிர்க்கு இயல் பாகியகுணம். 'திருநுதல் நாணு' என்பது அது.

ஊ லைத்தணிக்கும் வாயில்கள் :

பாணன், பாடினி, கூத்தர், இளையர், கண்டோர், பாகன், பாங்கன் பாங்கி, செவிலி, அறிவர், காமக்கிழத்தி, காதற்புதல்வன், விருந்தினர், ஆற்றாமை ஆகிய இவர்கள் தலைவன் தலைவியர் களுக்கிடையே ஏற்படும் ஊடலை நீக்குவார்கள்.