உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

இளங்குமரனார் தமிழ்வளம்

4

மறுமொழி கூறுதலும், பாங்கி தலைமகளைத் தலைமகற்கு அடைக்கலம் கொடுத்தலும், பாங்கி தலைவியைத் தலைவனுடன் இருள் செறிந்த இடையாமத்தில் விடுத்தலும், தலைமகளைத் தலைமகன் பாலை நிலத்தில் (சுரத்தில்) செலுத்துதலும், தலை மகள் பாலை நிலத்தில் செல்லுதலால் ஏற்பட்ட துன்பத்தைத் தலைமகன் ஆற்றுவித்தலும், தலைமகளை மகிழ்ந்து அவள் கூந்தற்கு மலரைச்சூட்டி, அதனால் பரவய மகிழ்ச்சியடைந்து கூறுதலும், தலைவன் தலைவியர்களின் தோற்றத்தைக் கண்டு இவர்கள் மானிடர்களா? அல்லது தேவர்களா எனக் கண்டோர் ஐயமுற்றுக் கூறுதலும், தலைவன் தலைவியர்மீது கொண்ட அன்பினால் பாலை நிலத்தில் உள்ள எயிற்றியர் ஆடவர் முதலாயினோர் அவர்களது செலவை விலக்கித் தங்கள் பாடியில் தங்கிப் போங்கள் என்று கூறுதலும், இவ்வாறு கண்டோர் கூறியதற்கு, இவ்விடத்தில் நும்பதியில் தங்கிப் போதல் பொருந்தாது, என்பதிப் போதல் வேண்டுமென்று தலைவன்

கூறியவழித், தலைவன் தன்பதி அருகில் இருக்கின்ற

தென்பதனைக் கண்டோர் கூறுதலும், தலைமகன் தலைமகட்குத் தன்பதி சேர்ந்தமை கூறுதலுமாகிய பதினெட்டும் உடன் போக்கின் விரிகளாகும்.

உடன் போக்கிடையீடு :-

தலைவியின் சுற்றத்தினர் ‘நம் இல்லத்தின்கண் மணந்து கொள்ளாமல் தன்னூரின்கண் மணந்து கொண்டனன் என்று வெறுப்படைதலை அறிந்து தலைவன் தலைவியை உடன் கொண்டு போகையில் தலைவியின் சுற்றத்தார் பின்தொடர்ந்து செல்லத் தலைமகளைத் தலைவன் விடுத்துச் செல்லுதல் உடன் போக்கிடையீடாகும். இது போக்கறிவுறுத்தல், வரவு அறிவுறுத்தல், நீக்கம், இரக்கமொடு மீட்சி என நான்கு வகைப்படும்.

உடன்போக்கிடையீட்டின் விரி :-

ஐம்பத்தைந்தா நாள், தன்ஊரை விட்டு நீங்குந்தலைவி எதிர் வருவார் தம்மொடு தலைவனுடன் உடன் போக்குச் செல்லுதலைப் பாங்கியர்க்கு உணர்த்தி விடுத்தலும், தலைமகள் தன் செலவை அந்தணர் மூலம் நற்றாய்க்குக் கூறிவிடுத்தலும் அச்செய்தியை நற்றாய்க்கு அந்தணர் மொழிதலும், அந்தணர் கூற்றைக் கேட்ட நற்றாய் முன்னிலைப் புறமொழியால் தலைவியின் களவொழுக்கத்தைத் தலைவியின் தமர்க்கு அறத்தொடு நிற்க,