உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடன் போக்கு :

அகப்பொருள்

171

இது தலைவியின் களவொழுக்கத்தை வெளிப்படுத்தற் குரிய கிளவித் தொகைகளுள் ஒன்று. தலைவியின் சுற்றத்தார்க்குத் தெரியாமல் தலைவன் தலைவியைத் தன்னூர்க்கு உடன் கொண்டு செல்லுதல்.

முன்னிலைப்புற மொழி :-

முன்நிற்பார்க்குக் கூறவேண்டுவனவற்றைப் பிறருக்குக் கூறுவார் போலக் கூறுவது முன்னிலைப்புறமொழியாகும்.

உடன் போக்கின் வகை

போக்கறிவுறுத்தல்,

போக்குடன்படாமை,

போக்

குடன்படுத்தல். உடன்படுதல், போக்கல், விலக்கல், புகழ்தல், தேற்றல் என உடன் போக்கு எட்டு வகைப்படும்.

உடன்படுதல் :

து உடன் போக்கின் வகைகளுள் ஒன்று. தோழியின் அறிவுரையின் படி தலைவியுந் தலைவனும் உடன் போக்கிற்கு உடன்படுதல்.

உடன்போக்கு நிகழ்ந்த விடத்து அறத்தொடு நிற்றற்கு உரியார் :-

தலைமகளும், தலைமகனும் புணர்ந்துடன் போய காலத்துத் தோழியும், செவிலியும், நற்றாயும் அறத்தொடு நிற்பார்கள்.

உடன் போக்கின் விரி :-

தலைவிக்குக் காவல் மிகுதியாக இருக்கின்றது. ஆகையால் அவளை உன் ஊர்க்கு உடன் கொண்டு செல்வாயாக என்று பாங்கி தலைமகனுக்குக் கூறுதலும், பாங்கியின் கூற்றிற்கு உடன்பட தலைமகன் மறுத்தலும், பாங்கி தலைமகனை உடன்படுமாறு செய்தலும், தலைவியை உடன் காண்டு செல்லத் தலைவன் உடன்படுதலும், தலைவனுடன் போதலைப் பாங்கி தலைவிக்கு உரைத்தலும், உட ன் போக்கினால் நாணழியுமே என்றதற்குத் தலைவி யிரங்கிக் கூறுதலும், வ்வாறு வருந்திய தலைவிக்குத் தோழி கற்பின் மேம்பாட்டைக் கூறுதலும், தலைவி தலைவனுடன் போதற்கு உடன்படுதலும், தோழி பாலை நிலத்தின் தன்மையைக் கூறியவிடத்துத் தலைவி