உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

இளங்குமரனார் தமிழ்வளம்

4

கூறுதலும், தலைவனைப் பாங்கி திருமண நாளளவும் நிலைபெற வாற்றிய நிலைமையை வினாதலும், கலியாணமனையில் வந்த செவிலித்தாய்க்குத் தோழி தலைவன் தலைவி ஆகிய இருவரது அன்பும் உறவும் உணர்த்தலும், தலைவன் தலைவி இல்வாழ்க்கை சிறப்பாக இருக்கிறது என்று பாங்கி செவிலித்தாய்க் குரைத்தலும், மணத்திற்குச் சென்று வந்த செவிலி தலைவியைப் பெற்ற நற்றாய்க்குத் தலைவன் தலைவியின் சிறப்பைக் கூறுதலும் செவிலி நற்றாய்க்குத் தலைமகன் இல்வாழ்க்கையின் தன்மையைக் கூறுதலும், செவிலி நற்றாய்க்குத் தலைவன் தலைவி ஆகிய ருவரது காதலையும் அறிவித்தலும் ஆகிய இல்வாழ்க்கையின் விரிகளாகும்.

இளவேனிற் காலத்தின் தன்மை :

பத்தும்

சித்திரை, வைகாசி ஆகிய இரு மாதங்களும் இளவேனிற் காலமாகும். இப்பருவத்தில் மன்மதன் தேராகிய தென்றல் வீசும். வண்டினமும், கிளியும், பூவையும், அன்றிலும், குயிலும் மகிழ்ச்சியுடன் இருக்கும். மாங்கனியுதிரும் நீர்மலரன்றித் தாழை, புன்னை, செண்பகம் முதலியவை மலரும். கார்ப்பருவத்து மகிழ்ந்த மயில் போன்றவை மெலியும். இவையே இக்காலத்தின் தன்மைகளாகும்.

இளிவரல் :-

இது எண்வகை மெய்ப்பாடுகளில் ஒன்று. மூப்பும், பிணியும், வருத்தமும், மென்மையும் என்ற நான்கின் பொருட்டினாலும் இளிவரல் தோன்றும். இவற்றுள் மூப்பு என்பது தன்னிடத்துத் தோன்றிய மூப்புகாரணமாகத் தோன்றும் இளிவரலும், பிறன்கட் தோன்றிய மூப்பு காரணமாகத் தோன்றும் இளிவரலும் என இரண்டாம். பிணி என்பது தன்கண் தோன்றிய பிணிகாரண மாகத் தோன்றும் இளிவரலும் பிறன்கட் தோன்றிய பிணிகாரணமாகத் தோன்றிய இளிவரலும் என இரண்டாம். வருத்தமென்பது தன்கட்தோன்றிய வருத்தங்காரணமாகத் தோன்றும் இளிவரலும், பிறன்கட் தோன்றிய வருத்தங் காரணமாகத் தோன்றும் இளிவரலும் என இரண்டாம். மென்மையென்பது மெல்லியல்பு காரணமாகத் தோன்றும் இளிவரல். இளிவரல் - இழிவு.

L