உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள்

169

கூறிய கொடுமையைத் தோழி தலைவிக்குணர்த்தலும். குறி பிழைத்தது என்பிழையன்று என்று தலைவி வருந்திக் கூறுதலு மாகிய பன்னிரண்டு துறைகளும் இரவுக்குறி இடையீட்டின் அல்ல குறிப்படுதலின் வகைக்குரிய விரிகளாகும். தாய் உறங்காது விழித்திருத்தல், தாய் தூங்கியபின் ஊரில் இருக்கும் நாய்கள் உறங்காமை, நாய் உறங்கியவிடத்து ஊரில் உள்ளமக்கள் உறங்காமை, ஊரார் உறங்கிய விடத்து நகர் காப்போர் துடியடித்துக் காண்டு விரைந்து ஊர் சுற்றி வருதல், தலைவன் இருட் குறிக்கண் வருதற்கு இடையூறாக நிலவு வெளிப்படுதல், கூகை குழறக் கேட்டதலைவி பயந்து கூறுதல், தலைவன் தலைவி ருவர்க்கும் இடையூறாய்க் கோழிகூவுதல் ஆகிய ஏழும் இரவுக் குறி இடையீட்டின் வருந்தொழிற்கருமை என்னும் வகைக் குரிய விரிகளாகும்.

இரக்கமொடு மீட்சி :-

இதுவும் உடன்போக்கிடையீட்டின் வகைகளுள் ஒன்று. தலைவன் தன்னைவிட்டு நீங்கினமையின் தலைவி வருத்தத்துடன் தமர்பின் தன்மனைக்கு மீண்டு வருதல் இரக்கமொடு மீட்சியாம். இருவரும் உள்வழி அவன் வரவுணர்தல் :

டு

இதுவும் பாங்கி (தோழி) மதி உடன்பாடு என்னும் களவியல் கிளவித் தொகைக்குரிய வகைகளுள் ஒன்று. தலைவியும் பாங்கியும் ஒருங்கிருந்த போது தலைமகன் தழையும் கண்ணியுங் கொண்டு வந்து ஊர், பெயர் முதலியன வினாயவிடத்துத் தோழி அதற்கு விடையளித்தலும், தலைவன் அப்பாற் சென்றவிடத்துத் தலைவியை நோக்கி அசதியாடி நகுதலும், பாங்கி தன் அறிவின் திறத்தால்

தலைவன் தலைவி ஆகிய இருவரது மனக் குறிப்பை

ஆராய்தலும் ஆகிய இவைகளால் கூட்ட முண்மையைப் பாங்கி உணர்தலாம்.

இல்வாழ்க்கையின் விரி :-

தலைவன் தலைவி முன் பாங்கியைப் புகழ்ந்து கூறுதலும், தலைவனைப் பாங்கி வாழ்த்திக் கூறுதலும், பாங்கி தலைவியைத் திருமண நாளளவும் துன்பப்படாமல் இருந்தவாற்றைக் கூறுகவென்றலும், தலைவன் அளித்த கையுறைப் பொருளையே துணையாகக் கொண்டு வருந்தாது இருந்தேன் என்று தலைவி