உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

இளங்குமரனார் தமிழ்வளம்

4

தலைவியைத் தோழி வீட்டிற்குக் கூட்டிப் போதலும், தோழி தலைமகளை வீட்டில் சேர்த்த பின்பு தலைமகனிடஞ் சென்று இவ்விருளில் நீ வாரல் என்று வரவு விலக்கிக் கூறுதலும், தோழி இவ்வாறு இரவுக் குறி விலக்கிய சொற்கேட்டுத் தலைமகன் மயங்கிக் கூறுதலும், பாங்கி தலைமகனுக்குத் தலைமகளின் துயரத்தைக் கூறி நீர் ஊர்போய்ச் சேர்ந்த செய்தியை யாம் அறியு மாறு குறிசெய்க என்று கூறிவிடுத்தலும், தலைமகன் தன்னூர் சேர்தலும் ஆகிய இருபத்தேழும் இரவுக் குறியின் விரிகளாகும். இரவுக்குறி இடையீடு ;-

எட்டாம் நாள் இரவுக் குறிக்கண் வந்த தலைமகன் அல்ல குறிப்படுதலால் இடையீடுபட்டுப் போதல். அல்லகுறிப்படுதலாவது- தலைவனும் தலைவியும் தோழியும் தங்களுக்குள் குறித்துக் கொண்டபடி தலைவனால் நிகழ்த்தப் படுதற்குரிய பறவை யெழுப்புதல், நீரிற் கல்லெறிதல், இளநீர் விழச் செய்தல் முதலிய குறிகள் பிறிதொன்றனால் நிகழ்த்தப்படத் தலைவி குறிக்கண் வந்து தலைவனைக் காணாது சென்றாள். பிறகு தலைவன் அங்கு வந்து தலைவியைப் பாராமல் சென்றான். இவ்வாறு தலைவனால் நிகழ்த்தப்படுதற்குரிய குறிகள் பிறிதொன்றனால் நிகழ்த்தப்படு தலின் அஃது அல்ல குறியாயிற்று.

இரவுக்குறி இடையீட்டின் விரி :

தலைவிக்குத் தோழி தலைவன் குறியிடத்து வந்தமையை உணர்த்தலும்; தலைவி தான் அல்லகுறியிடத்து நின்று தலைவனைக் காணாமையால் திரும்பி விடியற்காலத்து வந்து பாங்கியுடன் கூறுதலும்; தோழி தலைவன் செய்த தீங்கை எடுத்துக் கூறுதலும், தலைவன் தான் குறித்த குறியிலிருந்து தலைவி அல்லகுறிப்பட்டு வாராமையாற் வருந்தி தன் ஊர்க்குச் செல்லுதலும், ஒன்பதாம் நாள் பொழுது விடிந்த பின் தலைவி வறுங்களங் கண்டு துன்ப மடைதலும், தலைவி தன் துன்பத்தைத் தோழிக்குரைத்தலும், தலைமகளது துன்பத்தைப் பாங்கி தணித்துக் கூறுதலும், ஒன்பதாம் நாள் இருட்குறிக்கண் வந்த தலைவன்மேல் பாங்கி அல்லகுறிப்பட்ட குற்றம் ஏற்றிக் கூறுதலும், தலைவிமேல் தலைவன் அல்லகுறிப்பட்ட குற்றம் ஏற்றிக்கூறுதலும், தலைவி குறிமயங்கியதைத் தோழிதலைவனுக்கு உணர்த்தலும், தலைவன்