உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. எழுத்து

தமிழ் மொழியின் நெடுங்கணக்கில் வரும் முதல் எழுத்து. உயிர் முயற்சியாற் பிறக்கும் எழுத்துக்களுள் வாயைத் திறந்த அளவிலே ஒலிக்குங் குற்றெழுத்து. அஃறிணைப் பன்மைப் பெயரீறு. அஃறிணைப் பன்மை வினைமுற்று விகுதி.ஆறாவதன் பன்மையுருபு; பெயரெச்ச வினையெச்ச வியங்கோள் விகுதி. இன்மை, எதிர்மறை, குறைவு, உடன்பாடு, தடை, பிறிது, வியப்பு இவற்றைக் காட்டும் ஒரு துணை வரவு (உபசர்க்கம்) எட்டென்னுந் தமிழ் எண்ணாக வருவதும் இவ்வெழுத்தே. பண்டறி சுட்டு அகச்சுட்டுகளுக்கு முன்னும் வரும். எடுத்துக்காட்டு : அக்காலம்; அந்த மனிதன், அந்தக் கோயில். இவ்வெழுத்து அகரம்; அகாரம், அஃகான் எனச் கரச்சாரியையும் காரச்சாரியையும் கான்சாரியையும் பெற்று வழங்கும்.

-

அகச்சுட்டு அ, இ, உ என்னும் எழுத்துகள் சொற்களுக்கு உள்ளேயே நின்று பொருளைச் சுட்டிக் காட்டுமாயின் அப்பொழுது அவ்வெழுத்துகள் அகச்சுட்டு என்று கூறப்பெறும்.

(எ.டு) அவன், இவன், உவன்.

அகலவுரை :

விரித்துரை. அஃது இலக்கணமும் இலக்கியமும் எடுத்துக் காட்டிப் பொருள் விரித்துரைக்குஞ் சிறப்புரை.

அகவினா : :

சொற்களுக்குள்ளேயேயிருந்து வினாப் பொருள் தரும் சொற்களுக்கு அகவினா என்று பெயர். (எ.கா) எவன், யாது, ஏது? ‘அகம்' என்பதற்குச் சிறப்பு விதி :

6

அகம் என்னும் உள்ளிடப் பெயர் முன் செவி, கை என்னும் சினைப் பெயர்கள் வந்தால் நிலை மொழியிறுதி மகரம் வன்மைக்கு இனமாகத் திரிதலேயன்றி அதன் நடுவில் நின்ற ககர மெய்யும் அதன் மேலேறிய அகரவுயிருங் கெடும்.