உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்பொருள்

அகத்தடி உய்யாமை அஞ்சுடர்வா ளோச்சி மிகத்தடிந்தார் மேனின் றவர்.”

அறிவன்வாகை:

227

உலகோர் தனது புகழைக் கூறுமாறு . இறப்பு, நிகழ்வு, எதிர் வென்னும் முக்கால நிகழ்ச்சிகளையும் உணர்ந்து கூறும் அறிவனுடைய தன்மையைச் சொல்லியது அறிவன் வாகை என்னும் துறையாம்.

(எ.டு)

"இம்மூ வுலகின் இருள்கடியும் ஆய்கதிர் போல் அம்மூன்றும் முற்ற அறிதலால்- தம்மின் உறழா மயங்கி உறழினும் என்றும்

பிறழா பெரியோர்வாய்ச் சொல்.'

அறுவகைப் பட்ட பார்ப்பனப்பக்கம்:

ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல்

என்ற ஆறும் பார்ப்பனர்க்கு உரிய கூறுபாடு.

(எ.டு)

"முறையோதி னன்றி முளரியோ னல்லன்

மறையோதி னானிதுவே வாய்மை-யறிமினோ வீன்றாள் வயிற்றிருந்தே யெம் மறையு மோதினான் சான்றான் மகனொருவன் றான்

இஃது ஓதல்.

'எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு”

இஃது ஓது வித்தற் சிறப்பு.

“ஈன்ற வுலகளிப்ப வேதிலரைக் காட்டாது வாங்கியதா யொத்தானம் மாதவத்தோ-னீந்த மழுவா ணெடியோன் மயக்கஞ்சால் வென்றி வழுவாமற் காட்டிய வாறு

இஃது வேட்பித்தல்.