உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

(எ.டு)

66

இளங்குமரனார் தமிழ்வளம்

4

'குடிப்பிறப் புடுத்துப் பனுவல் சூடி

விழுப்பே ரொழுக்கம் பூண்டு காமுற வாய்மை வாய்மடுத்து மாந்தித் தூய்மையிற் காதலின் பத்துத் தூங்கித் தீதறு

நடுவுநிலை நெடுநகர் வைகி வைகலு மழுக்கா றின்மை யாவாஅ வின்மையென விருபெரு நிதியமு மொருதா மீட்டுந் தோலா நாவின் மேலோர் பேரவை

யுடன்மரீஇ யிருக்கை யொருநாட் பெறுமெனிற் பெறுகதில் லம்ம யாமே வரன்முறைத்

தோன்றுவழித் தோன்றுவழிப் புலவுப் பொதிந்து

நின்றுழி நின்றுழி ஞாங்கர் நில்லாது

நிலையழி யாக்கை வாய்ப்பவிம்

மலர்தலை யுலகத்துக் கொட்கும் பிறப்பே.

அவையமுல்லை:

குற்றந்தீர நடுவு நிலைமையைச் சொல்லிக் கூறுகின்ற அறங் கூறவையத்துச் சான்றோரது தன்மையைச் சொல்லியது அவைய முல்லை என்னும் துறையாம்.

(ஏ.டு)

"தொடைவிடை ஊழாத் தொடைவிடை துன்னித் தொடைவிடை ஊழிவை தோலாத்-தொடைவேட்டு அழிபடல் ஆற்றால் அறிமுறையேன் றெட்டின் வழிபடர்தல் வல்ல தவை.'

அழிபடைதாங்கல்:

99

உழிஞையரால் தமது படை அழிந்தமை பொறாது நொச்சி மறவர் சினந்து தமது மதில் காத்தலின் கண் உறுதி கொண்டது அழிபடை தாங்கல் என்னும் துறையாம்.

(எ.டு)

“பாரிசை பலகடந்து பற்றார் எதிர்ந்தார்

எரிசெய் இகலரணங் கொண்மார்- புரிசை