உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(எ.டு)

66

புறப்பொருள்

'களம்புகல் ஓம்புமின் தெவ்வீர் போர் எதிர்ந்து

எம்முளும் உளன்ஒரு பொருநன் வைகல் எண்தேர் செய்யும் தச்சன்

திங்கள் வலித்த காலன் னோனே”

அருளொடு நீங்கல்:

225

இவ்வுலக வாழ்க்கையில் நிகழும் துன்பத்தை உணர்ந்து அதன்கட் பற்று நீங்கியது அருளொடு நீங்கல் என்னும் துறையாம். (எ.டு)

“கயக்கிய நோயவாய்க் கையிகந்து நம்மை இயக்கிய யாக்கை இருமுன்- மயக்கிய பட் படா வைகும் பயன் ஞால நீள்வலை உட்படாம் போத லுறும்.

அருளொடு புணர்ந்த அகற்சி:

(எ.டு)

அருளுடைமையோடு பொருந்தின துறவறம்.

“தன்னுயிர்க் கின்னாமை தானறிவா னென் கொலோ மன்னுயிர்க் கின்னா செயல்

அவிப்பலி:

செஞ்சோற்றுக் கடன் அன்றி மற்றையதை எண்ணாத மறவர், பகைவர்கள் நாணுமாறு தம் தலைவன் பொருட்டு முன்பு சொன்ன உறுதிமொழியை மெய்ப்பித்தற்காக வாட்போரின் கண் தமது உயிரைப் பலியாகக் கொடுப்பது அவிப் பலியாகும். (எ.டு)

"இழைத்த திகவாமைச் சாவாரே யாரே பிழைத்த தொறுக்கிற் பவர்”

அவையகத்தார் தன்மை:

குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், வாய்மை,தூய்மை, நடுவு நிலைமை, அழுக்காறாமை, அவாவின்மை, ஆகிய எண்வகைக் குணத்தினைக் கருதிய அவையகத்தாரது நிலைமையாம்.