உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

இளங்குமரனார் தமிழ்வளம்

4

அரசர்க்குரிய ஐவகைச் செயல்கள்:

ஓதலும், வேட்டலும், ஈதலும், படை வழங்கலும், குடி காத்தலும் ஆகிய ஐந்தும் அரசர்க்குரிய கூறுபாடாம்.

(எ.டு)

66

ஒருமழுவாள் வேந்த னொருமூ வெழுகா

லரசடு வென்றி யளவோ- வுரைசான்ற

வீட்டமாம் பல்பெருந்தூ ணெங்கும் பசுப்படுத்தது வேட்டநாள் பெற்ற மிகை

இஃது வேட்டல்

66

99

ஆபயன் குன்று மறு தொழிலோர் நூல் மறப்பர்

காவலன் காவா னெனின்'

99

இஃது காவல் கூறிற்று.

“கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட்ட தனோடு நேர்'

இஃது தண்டம்.

அரசவாகை:

நுகத்தின் கட் பகலாணி போன்ற நடுவு நிலைமைச் சொல் லினையுடைய வேந்தனது இயல்பினைக் கூறியது அரசவாகை என்னும் துறையாம்.

(எ.டு)

"காவல் அமைந்தான் கடலுலகங் காவலால் ஓவல் அறியா துயிர்க்குவகை-மேவருஞ்சீர் ஐந்தொழில் நான்மறை முத்தீ இருபிறப்பு வெந்திறல் தண்ணளியெம் வேந்து.”

அரும்பகை தாங்கும் ஆற்றல்:

போரிட முடியாத பெரிய பகைக் கூட்டத்தினரையும்

எதிர்த்து நிற்கும் ஆற்றலாம்.