உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(எ.டு)

புறப்பொருள்

“கயற்கூடு வாள் முகத்தாட் கண்ணிய நெஞ்சம் முயற்கூடு முன்னதாக் காணின்- உயற்கூடும் காணா மரபிற் கடும்பகலும் கங்குலும் நாணாளு மேயா நகை.

அதரிடைச் செலவு:

223

போர் செய்தற்கு இயலாதவர் ஊரின் கண் தங்கி நிற்க, ஏனைய கரந்தை மறவர் வெட்சி மறவரை அவர் சென்ற வழியே தொடர்ந்து சென்றது அதரிடைச் செலவு என்னும் துறையாம். (எ.டு)

“சங்குங் கருங்கோடும் தாழ்பீலிப் பல்லியமும் எங்கும் பறையோ டெழுந்தார்ப்ப- வெங்கல் அழற்சுரந் தாம்படர்ந்தார் ஆன்சுவட்டின் மேலே நிழற்கதிர்வேல் மின்ன நிரைத்து.”

அரச உழிஞை:

உழிஞைவேந்தனது புகழைப் பாராட்டியது அரச உழிஞை

என்னும் துறையாம்

(எ.டு)

66

'ஊக்க முரண்மிகுதி ஒன்றிய நற்சூழ்ச்சி ஆக்க மவன்கண் அகலாவால்-வீக்கம் நகப்படா வென்றி நலமிகு தாராற்கு அகப்படா இல்லை அரண்.

அரசமுல்லை:

போர்செய்யும் களத்தின்கட் பகையை வருத்தும் நெடிய வேலேந்திய காவல் செய்யும் மன்னனது

சொல்லியது அரசமுல்லை என்னும் துறையாம்.

(எ.டு)

"செயிர்க்கண் நிகழாது செங்கோல் உயரி மயிர்க்கண் முரசு முழங்க- உயிர்க்கெல்லாம் நாவல் அகலிடத்து ஞாயி றனையனாய்க் காவலன் சேறல் கடன்.

99

தன்மையைச்