உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

இளங்குமரனார் தமிழ்வளம்

4

அகமிசைக் கிவர்தல்:

ஊரில் நடுவண் அமைந்த மதிலும், புறத்தே அமைந்த மதிலும் அன்றிக் கோயிலின் மதிலின் மேல் ஏறி நின்று போர் செய்தற்குப் பரந்து சென்றோன் கூறுபாடே அகமிசைக்கிவர்தலாம். (எ.டு)

“வாயிற் கிடங் கொடுக்கி மாற்றினார் தம்பிணத்தாற் கோயிற் கிடங்கொடுக்கிக் கோண்மறவர்- ஞாயிற் கொடுமுடிமேய் குப்புற்றார் கோவேந்தர்க் காக நெடுமுடிதாங் கோட னினைந்து”

இஃது புறத்தோன் அகமிசைக் கிவர்தல். "புற்றுறை பாம்பின் விடநோக்கம் போனோக்கிக் கொற்றுறை வாய்த்த கொலைவேலோர்-கொற்றவ னாரெயின் மேற்றோன்றினா ரந்தரத்துக் கூடாத போரெயின் மேல் வாழவுணர் போன்று"

இஃது அகத்தோன் அகமிசைக் கிவர்தல்.

அடிப்பட இருத்தல்:

உழிஞையரசன் பகைவர்

நாடு தன்னகப்படுதற்

பொருட்டும் தன்பாற் போர் செய்தற் பொருட்டும் பாசறையிலே நீண்ட காலம் தங்கியது அடிப்பட இருத்தல் என்னும் துறையாம்.

(எ.டு)

“ஒன்றி யவர்நா டொருவழித்தாய்க் கூக்கேட்ப

வென்றி விளையா விழுமதிலோர்- என்றும்

பருந்தார் செருமலையப் பாடிப் பெயராது இருந்தான் இகல்மறவர் ஏறு.

ஆண்பாற்கிளவி:

தலைவியின்பால் அவாவுறுதற்குக் காரணமான காமம் எல்லை கடத்தலானே ஏங்கி மயங்கிய தலைவன் கூறியது ஆண்பாற்கிளவி என்னும் துறையாம்.