உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்பொருள்

அகத்துழிஞையோர்:

முற்றப்பட்டோர், மதில்காப்போர் ஆகிய இருதிறத்தாரும் அகத்துழிஞையோராவர்.

அகத்தோன் செல்வம்:

மதிலின் உட்புறத்தே உள்ள அரசனது படை, குடி, கூழ், குடி,கூழ், அமைச்சு, நட்பு, நீர்நிலை, ஏமப்பொருண் (பாதுகாப்பு) மேம்படு பண்டங்கள் முதலிய செல்வங்களின் சிறப்பைக் கூறுவது. அகத்தோன் வீழ்ந்த நொச்சி:

புறமதிலன்றி உள் மதிலிடத்தும் புறத்தோனால் கைக் கொள்ளப்பட்ட அகத்தோன் விரும்பின மதில் காவல்.

(எடு:)

“இருகன்றி னொன்றிழந்த வீற்றாப் போற்சீறி

யொருதன் பதிசுற் றொழியப்- புரிசையின்

வேற்றரணங் காத்தான் விறல் வெய்யோன் வெஞ்சினத்துக் கூற்றரணம் புக்கதுபோற் கொன்று"

அகத்துழிஞை:

சினம் மிகுந்த உழிஞை. மறவர் நொச்சியாரைப் போரின்கண் வென்றது, அகத்துழிஞை என்னும் துறையாம்.

(எ.டு)

“செங்கண் மறவர் சினஞ் சொரிவாள் சென்றியங்க

அங்கண் விசும்பின் அணிதிகழும்-திங்கள்

முகத்தார் அலற முகிலுரிஞ்சும் சூழி

அகத்தாரை வென்றார் அமர்.”