உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

விலக்கல் :

4 இளங்குமரனார் தமிழ்வளம்

இஃது உடன்போக்கின் வகைகளுள் ஒன்று. தலைவன் தலைவியின் தளர்ச்சி கண்டு அவளுடன் ஓரிடத்தில் தங்கிய போது கண்டோர் அவர்கள் மீது அன்புகொண்டு அவர்கள் செலவை விலக்கித் தங்களோடு தங்கிச் செல்லுமாறு கூறுதல். வினாதல் : (1)

இது தன்மனைவரைதலின் வகைகளுள் ஒன்று. தலைவியின் நற்றாய் ‘நம் இல்லின்கண் நம் புதல்விக்குத் திருமணம் நடத்துமாறு தலைமகன் நற்றாயைக் கேட்போமா' என்று செவிலியை வினாதல்.

வினாதல் : (2)

இது மீட்சியின் வகைகளுள் ஒன்று.

உடன்போக்குச் சென்ற தன்மகள் காதலனுடன் வருகின்றாள் என்பதனை அறிந்த நற்றாய் நம் புதல்வியை நம்மனைக்கே காண்டு வருவானோ? தன்நெடு நகர்க்கே கொண்டு செல்வானோ? என்று வெறியாட்டாளனை வினாவுதல்.

வெகுளி :

இது எண்வகை மெய்ப்பாடுகளுள் ஒன்று. உறுப்புகள் முதலியவற்றை அறுத்தல், தன்கீழ் வாழ்வோரைத் துன்புறுத்தல், வைதல் அடித்தல், கொலைக்கு ஒருப்படுதல் ஆகிய நான்கு வகையான வெறுக்கத்தக்க செயல்களால் வெகுளி தோன்றும்.