உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள்

219

அதற்குத் தலைவன் உங்களை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு எனக் கூறுதலும், தலைவியை ஆற்றுவித்திருந்த அருமையைத் தலைமகனுக்குத் தோழி கூறுதலும் ஆகிய இருபத்தொன்றும் வரைவிடைத்துப் பொருவயிற் பிரிதலின் விரியாகும்.

வரும் வழிக்கலங்கல் :

வினைமுற்றிய தலைவன் மீண்டு வரும் வழியில் தலைவியின் நிலையை எண்ணி வருந்துதல் வரும் வழிக் கலங்கலாகும்.

வன்புறை : (அ)

தலைவன்

பிரிந்தவிடத்துத் தலைவி வருந்துவாள். அவ்வாறு வருந்துந்தலைவியைத் தோழி இடித்துக் கூறுதல் வன்புறையாகும்.

வன்புறை

(ஆ)

தலைவி ஐயுற்றவழித் தலைவன் ஐயம் நீ ங்க வற்புறுத்திக் கூறுதல் வன்புறையாகும். வன்பு - வலிமை. உறை - உறுத்தல். இது ஐயந்தீர்த்தல், பிரிவுறுத்தல் என இருவகைப்படும். ஐயந்தீர்த்த லாவது தலைவிக்குண்டான ஐயத்தைத் தலைவன் நீக்குதல். பிரி வுறுத்தலாவது தலைவன் தன்பிரிவைத் தலைவிக்கு அறிவித்தல். வன்பொறை :

தலைவி வலிதிற் பொறுத்துக்

தலைவன் பிரிவைத் தலைவி கொள்ளுதல் வன்பொறையாகும்.

வாயில் நேர்தல் :

பாணன்

முதலியவர்களின்

கூற்றுக்கிணங்கத்

தலைமகள் வாயிலை ஏற்றுக் கொள்ளுதல் வாயில் நேர்தலாகும்.

வாயில் நேர்வித்தல் :

பாணன், தோழி முதலியோர் தலைமகளை வாயிலை ஏற்றுக் கொள்ளுமாறு செய்தல் வாயில் நேர்வித்தலாகும். வாயில் மறுத்தல் :

பாணன் முதலியவர்களைத் தலைமகன் அனுப்பத் தலைவி மறுத்தல் வாயில் மறுத்தலாகும்.

வாயில் வேண்டல் :

வாயிலாக

பரத்தையிற் பிரிந்த தலைமகன் தோழியைத் தனக்கு வாயி லாகுமாறு வேண்டுதல் வாயில் வேண்டலாகும்.