உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

எதிர்ந்தமையைத்

இளங்குமரனார் தமிழ்வளம்

4

தோழி

தலைமகட்குக் கூறுதலும், இச்செய்தியைக் கேள்வியுற்ற தலைவி மகிழ்ச்சியடங்காது உள்ளத்தொடு கூறுதலும், தலைவனைத் தோழி வாழ்த்துதலும், தலைவி மணம் பொருட்டாகத் தெய்வத்துக்குச் சிறப்புச் செய்து வாழ்த்திக் கொண்டு நிற்கும் நிலையைப் பாங்கி தலைமகற்குக் காட்டலும், தலைவியின் நிலைகண்ட தலைவன் மகிழ்தலும் ஆகிய ஏழும் வரைவு மலிதலின் விரிகளாகும்.

வரைவிடை வைத்துப் பொருள் வயிற் பிரிதலின் விரி:-

தலைவன் தன் திருமணத்திற்கு வேண்டிய பொருள் காரண மாகப் பிரியப் போவதைத் தலைவிக்குக் கூறுமாறு தோழியிடங் கூறுதலும், தோழி, நின்பிரிவை நீயே அவட்குக் கூறுகவெனக் கூறுதலும், தலைவன் காலங்கடக்காமல் விரைந்து வருவேன் என்று பாங்கியொடு கூறி நீங்குதலும், பாங்கி தலைவன் பிரிந்து சென்றதைத் தலைவிக்குக் கூறுதலும், தலைவன் செலவை அறிந்த தலைமகள் வருந்துதலும், இவ்வாறு நீவருந்துவது தகாது என்று தோழி தலைவியை இடித்துக் கூறுதலும், இடித்துக் கூறிய பாங்கியைத் தலைவி மனத்துள் நொந்து கூறுதலும், பாங்கி இடித்துக் கூறியதனை ஊரின் மேல் வைத்துக் கூறுதலும், தலைவர் மீண்டு வருவர் எனத் தோழி ஆற்றுவித்தலும், தலைவன் பிரிந்து சென்ற காலத்து, கார்காலத்திற்கு முன்னே வருவேன் என்று குறிப்பால் கூறிப் போயினான். ஆகையால் அப்பருவங் கண்டு தலைமகள் புலம்புதலும், அவ்வாறு வருந்திய தலைவியின் துன்பம் நீங்கும் வண்ணம் இது கார்கால மேகமன்று, காலமல்லாக் காலத்தில் தோன்றிய மேகம் என்று தோழி கூறுதலும், தலைமகள் தோழி கூறியதனை மறுத்துக் கூறுதலும், தலைவி கார்காலம் வந்ததென்று கூறிய கூற்றைக் கேட்ட பாங்கி, தலைவன்தான் வருகின்ற செய்தியை அறிவித்தற்கு விடுப்ப

பொழுது இம்மேகம் வந்து அடைந்ததென்று கூறுதலும், அதைக் கேட்ட தலைமகள் ஆற்றியிருத்தலும், பொருள் திரட்டச் சென்ற தலைமகன் தன் செயல் முடிந்த பிறகு அவ்விடத்துத் தலைவியை நினைத்து வருந்துதலும், செயல் முடிந்து திரும்பி வருங்கால் தேரை விரைந்து செலுத்துகவெனத் தலைவன் பாகனொடு கூறுதலும், தலைவன் வருங்காலத்து மேகத்தை நோக்கிக் கூறுதலும், தோழி வலம் புரியோசையைக் கேட்டுத் தலைவன் வரவைத் தலைமகளுக்குக் கூறுதலும், வலம்புரியைத் தலைவி வாழ்த்துதலும், தலைவன் பிரிந்து சென்ற காலத்து எங்களை நினைத்தீரா எனத் தோழி வினாதலும்,