உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள்

217

கூறுதலும், இருட்குறிக்கண் தலைவன் வந்து செல்லும் வழியைக் கருதி அவ்வழி ஏதத்தால் உண்டாகிய அச்சத்தால் தலைவி கூறுஞ் சொல்லும், காமவேட்கை மிக்குழிக் கடல், கானம், பொழில், விலங்கு, புள்இவற்றை நோக்கித் தலைவி இரங்கிக் கூறுதலும், தலைவி தன்னிடத்துள்ள துன்பத்தைப் பிறிதொன்றன் மேலிட்டுக் கூறுதலும், தலைவன் வரும் வழியை விலக்கெனப் பாங்கியொடு கூறுதலும், தலைவன் வரும் இருட்குறியை விலக்கெனத் தோழியோடு கூறுதலும், தாய்வெறியாடுதல் காண்டாள் என்று தலைவர்க்குக் கூறி இருட்குறிவருவதை விலக்கெனத் தலைவி தோழிக்குக் கூறுதலும், பிறர் மணம் பேசி வருவதைத் தலைவர்க்குக் கூறி வரைவு விலக்கெனப் பாங்கிக்குத் தலைவி கூறுதலும், பெரியோரை வரைவு கூறிவர நமர்எதிர்கோடலைச் செய்யென்று தலைவி பாங்கியொடு பதினெட்டும் வரைவு கடாதலின்

கூறுதலும் விரிகளாகும்.

ஆகிய

வரைவின் இலக்கணம் :

வரைவு என்று

சொல்லப்படுவது தலைமகன்

தலைமகளைக் கொடுத்தற்குரிய முறைமையையுடைய குரவர் முதலாயினோர் கொடுப்பவும், கொடுக்காவிடத்தும் திருமணச் சடங்கொடு பொருந்த மணஞ் செய்து கொள்வதாம். வரைவு மலிதல் :

வரைவு தொடங்கி நடக்கும் முயற்சி மிகுதல் வரைவு மலித லாகும். இது பாங்கி வரைவின் பொருட்டு நடக்கும் முயற்சியைத் தலைவிக்குத் தெரிவித்தலும், தலைவன் சுற்றத்தார் மணங்கூறி வந்தபோது தலைவியின் சுற்றத்தார் எதிர்ந்தமையைத் தோழி தலைவிக்குக் கூறுதலும், தம்முடைய சுற்றத்தார் வரைவு எதிர்ந்த தனால் தலைவி மகிழ்தலும், மணம் நேர்ந்த தமர் ஏவலாய்த் தலைவி மணத்தின் பொருட்டுத் தெய்வத்தை வணங்குதல் கண்டு தலைவன் மகிழ்தலும் என நான்கு வகைப்படும்.

வரைவு மலிதலின் விரி :

பெண் கொள்ளுதற்குரியார் பெண் கொடுத்தற்குரியார்க்குக் கொடுக்கும் பொருளைக் காதலன் கொடுத்தமையைத் தோழி தலைமகளுக்குக் கூறுதலும், காதலன் கொடுத்த பொருள்களைக் கண்டு, மகட்கு, மணக்காலம் என்று நற்றாய் மகிழும் உள்ளத்து நிகழ்ச்சியைத் தலைவி நினைத்தலும், தலைவன் சுற்றத்தார் மணம் பேசி வந்த விடத்துத் தலைவியின் சுற்றத்தார்