உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

இளங்குமரனார் தமிழ்வளம் 4

மிகுதியாகவுள்ளதென்று தலைமகனுக்குக் கூறுதலும், தலைவியின் காம வேட்கைமிக்கதென்று கூறுதலும், தலை விக்குக் கனவினால் வந்த துன்பத்தைத் தோழி தலைமகனுக்குக் கூறுதலும், தலைவியின் அழகு அழிந்தமையைத் தலைவனுக்குக் கூறுதலுமாகிய இருபது துறைகளும் வரைவு கடாதலின் விரி களாகும்.

வரைவு நிகழுங்காலம் :

தலைவியின் களவொழுக்கம் வெளிப்படா முன்னும், வெளிப்பட்ட பின்னும் வரைவு நிகழும்.

வரைதல் வேட்கை : :

ஒன்பதாம் நாள் இரவு இருட்குறி இடையீடு பட்டதனால் பத்தாம் நாள் தலைவி வரைதல் வேட்கையாற் கூறுதல் வரைதல் வேட்கையாகும். அஃது அச்சம், உவர்த்தல், ஆற்றாமை என மூவகைப்படும். அச்சம் - தலைவிதலைவனை அடைதற்கு இடை யூறான நிகழ்ச்சிகள் உண்டாகத் தலைவி அஞ்சுதல். உவர்த்தல் தோழி தலைவனை வெறுத்துக் கூறுதல். ஆற்றாமை - தலைவன் வராமையைத் தலைவி பொறாமல் வருந்துதல்.

வரைதல் வேட்கையின் விரி :

தலைமகளைத் தோழி நின் துன்பத்திற்குக் காரணம் யாது எனவினாதலும், தமது களவொழுக்கத்தைச் செவிலி அறிந்து காண்டமையைத் தலைவி தோழிக்கு அறிவித்தலும், தலைவன் இரவுக்குறிக்கண் வருதற்கு இடையூறாகிய நிகழ்ச்சிகள் நிகழ்தலைத் தோழிக்குத் தலைவி தெரிவித்தலும், நம் நலனுண்ட பாதகர் இருப்பிடத்தை அறிந்து அங்குச் செல்வோம் நீ அஞ்சாதே என்று பாங்கி தலைவிக்குக் கூறுதலும், தோழி தலைவனின் தன்மையைப் பழித்துரைத்தலும், தலைவி தலைவனின் இயல்பைப் புகழ்தலும், தலைவன் கனவில் கூடினனாக, விழித்தபின்பு பொய்யாய்ப் போன துன்பத்தைப் பதினொன்றாம் நாள் தோழியிடம் தலைவி கூறுதலும், தலைவனுடன் கூடப் பெறாமையால் தன் அழகிழந்த தனைத் தோழிக்குத் தலைவி கூறுதலும், தன் துன்பத்தைத் தலைவற்கு உணர்த்தல் வேண்டும் என்று தோழிக்குக் கூறுதலும், யான் காம நோயால் துன்பமடைதலைத் தலைவர்க்கு நீ சென்று கூறுகவெனத் தலைவி கூறியதற்குத் தலைவியை நோக்கித் தோழி சொல்லுதலும்.

உறவினர்களும் அயலாரும் சொல்லும் அலரைக்கருதி உண்டாய பயத்தால் தலைமகள் பாங்கியிடங்

அதனால்

-