உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள்

வரைவுகடாதலின் வகை :

தோழியானவள் தலைவியைத் தலைவன் L

எண்ணித்

215

மணந்து

காள்ளுமாறு சய்ய தலைவனிடம் பொய்யானவற்றைத் தானே புனைந்து கூறுதலும், தலைவன் குறிக்கண் வருதலைப் பொய்யாகவும், வெளிப்படையாகவுந் தோழி மறுத்துக் கூறுதலும், தலைவனிடம், நீ தலைவியை மணந்து கொள்ளாமல் களவின்கண் ஒழுகுதல் நின்னுடைய நாடு முதலியவற்றிற்கு ஏற்புடையதன்று எனத் தோழிகூறுதலும், தலைவனுக்கு மெய்யாயினவற்றைத் தோழி கூறுதலுமாகிய நான்கும் வரைவுகடாதலின் வகைகளாகும்.

L

வரைவுகடாதலின் விரி :

L

தலைவியின் களவொழுக்கத்தைச் செவிலித்தாய் அறிந்து தன்னை வினவியதாகவும், தான் அதற்கு மறைத்துக் கூறிய தாகவும், தோழி தலைவனிடம் கூறுதலும், ஊரில் தலைவியைத் தூற்றும் அலர் விரிந்த தென்று தலைவனுக்கு அறிவுறுத்தலும், களவொழுக்கத்தை நற்றாய் அறிந்தாள் என்று தலைவற்குக் கூறுதலும், நற்றாய் தலைவியின் வேறுபாட்டிற்குக் காரணத்தை அறிய வெறியாடுபவனை வினவ எண்ணினாள் என்று தலை மகனுக்கு அச்சமுறுத்திக் கூறுதலும், தலைவியைப் பிறர் மணம் பேசி வந்ததனைத் தலைமகனுக்கு அறிவித்தலும், தோழி தலைவனை நோக்கி நீ மணம்பேசி எங்கள் வளநகர்க்கு வந்தால் எமர் எதிர் கொண்டு வருவாரெனக் கூறுதலும், மணஞ் செய்வதற்குரிய நாளை அறிவித்தலும், தலைமகளின் அறிவின் திறத்தைத் தோழி தலைமகனுக்கு அறிவுறுத்தலும், தோழி தலைவனை இக்குறிக்கண் வராது வேறோர் குறிக்கண் வருக வெனப் பணித்தலும், பகற்குறி வருவானை இருட்குறிக்கண் வருகவெனக் கூறுதலும், இருட்குறிக்கண் வருபவனை பகற் குறிக்கண் வருகவெனக் கூறுதலும், பகற்குறியிலும் இரவுக் குறியிலும் வருகவெனக் கூறுதலும், பகற்குறி இரவுக்குறி ஆகிய இரண்டு குறிகளிலும் வாரற்க எனக் கூறுதலும், தோழி தலைவனிடம் நின்நாட்டிற்கும் ஊருக்கும், குலப்பெருமைக்கும் குடிமைக்கும் புகழுக்கும் வாய்மைக்கும் நீ

செய்யும்

நல்வினைக்கும் தலைவியை மணந்து கொள்ளாது நடப்பது முறைமையன்று எனக் கூறுதலும், வரும் வழியில் விலங்கால் தோன்றும் அச்சத்தைக் கூறுதலும், தலைமகளது ஆற்றாமையை அவளை மணஞ்செய்து ஆற்றுதல் செய்யத் தலைமகனுக்குக் கூறுதலும், குறியிடத்து நீவருதற்கும் அவள்வருதற்கும் காவல்