உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

4 இளங்குமரனார் தமிழ்வளம்

அறிவிக்குமாறு தோழியிடங் கூறுதலாகிய பிரிவறிவுறுத்தலும், தலைவன் பிரிந்து செல்வதற்குத் தோழி உடன்படாமையாகிய பிரிவுடன் படாமையும், பாங்கி உடன்படுதற்குரிய சொற்களைச் சொல்லி அவளை உடன்படச் செய்தலாகிய பிரிவுடன் படுத்தலும், திருமணத்தை இடையில் வைத்துப் பொருள் காரணமாகத் தலைவன் செல்லுதற்குத் தோழி உடன்படுதலாகிய பிரிவுடன் படுதலும், தலைவன் திருமணத்தை இடையே வைத்துப் பொருள் காரணமாகப் பிரிந்த போது தலைவி மனங்கலங்கி வருந்துதலாகிய பிரிவுழிக்கலங்கலும், தோழி தலைவியை இடித்துக் கூறுதலாகிய வன்புறையும், தலைவன் பிரிவினால் உண்டாகிய பொறுத்தற்கரிய துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருத்தலாகிய வன்பொறையும், தலைவன் திரும்பி வரும் வழியில் தன்பிரிவால் தன் தலைவிக்கு உண்டாகக் கூடிய ஆற்றா மையை எண்ணி மனங்கலங்கிக் கூறுதலாகிய வரும் வழிக் கலங்க லும், தலைவன் திரும்பி வந்தபொழுது தலைவி மகிழ்தலாகிய வந்துழிமகிழ்ச்சியும் ஆகிய ஒன்பதும் வரை விடைவைத்துப் பொருள் வயிற்பிரிதலின் வகைகளாகும்.

வரைவிடை வைத்துப் பொரு வயிற் பிரிதல் :

திருமணத்தை இடையிலே வைத்துத் திருமணத்திற்கு வேண்டும் பொருள் காரணமாகப் பிரிதல் வரைவிடைவைத்துப் பொருவயிற் பிரிதலாகும்.

வரைதல் :

ஐம்பத்தாறாம் நாள் தலைவன் மீண்டு தலைவி மனைக்கண் வாராவிடத்து, தலைவியின் தமர் எதிர் கொண்டு போய் அழைத்து வந்தபின் உலகவழக்கப்படி பலவிதமாக அருங்கலன் முதலிய வேண்டுவன கொடுத்துச் சான்றோரை முன்னிட்டு மணச் சடங்குடனே வதுவை முடித்துக் கோடல் வரைதலாகும். வரைவிற்குரிய கிளவித் தொகை :

வரைவு மலிவு, அறத்தொடு நிற்றல் என்ற இரண்டும் வரை விற்குரிய கிளவித் தொகையாகும்.

வரைவு கடாதல் :

தோழி தலைவனொடு வரைவு கூறிவினாதல் வரைவு கடாதலாகும்.