உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள்

213

நகை முதலாக உவகை ஈறாகக் கூறப்பட்ட மெய்ப்பாடுகள் அல்லாதவிடத்து மெய்ப்பாடுகளாக வரும்.

மெய்ப்பாட்டிற்கு ஒப்புமை :

ஒத்த பிறப்பும், ஒத்த ஒழுக்கமும், ஒத்த ஆண்மையும் ஒத்த வயதும், ஒத்த அழகும், ஒத்த அன்பும், ஒத்த நிறையும், ஒத்த அருளும், ஒத்த அறிவும், ஒத்த செல்வமும் என்னும் பத்து வகையும் தலைமக்களுக்கு இருக்கவேண்டிய ஒப்புப் பகுதியாம். மெய்ப்பாட்டின் நுட்பம் :

கண்ணினாலும் செவியினாலும் நன்றாக அறிந்து கொள்ளும் அறிவுடைய மக்கட்கல்லது மெய்ப்பாட்டுப் பொருள் கொள்ளுதல், ஆராய்தற்கு அருமையுடையதாகும். மெய்யுறுபுணர்ச்சி நிகழுங்காலம் :

П

தலைமகளைத் தலைமகன் தனியிடத்துக் காணுதலும், இவளைப் பெற வேண்டுமென்னும் உள்ள நிகழ்ச்சியும், இடை விடாது நினைத்தலும், தன் எண்ணம் கைகூடாது வருதலின் உண்ணாமையால் உடல் மெலிதலும், தன் உள்ளத்தில் உண்டா கின்ற வருத்த மிகுதியைப் பிறர்க்கு எடுத்துரைத்தலும், நாணத்தின் எல்லையைக் கடத்தலும், தான் காணுகின்ற பொருள்களெல்லாம் தலைவியின் உறுப்புகளே போலத் தோற்றுதலும், அதுவே, பித்தாதலும், அது காரணமாக மயக்கமுறுதலும், கைகூடாத விடத்து இறந்துபடுதலும் ஆகிய பத்து அவத்தைகளும் ஒருங்கே நிகழுமாயின் தலைமகனுக்கு மெய்யுறு புணர்ச்சி கூடுதற்குரியதாம். மேவுதல் :

இது தன்மனைவரைதலின் வகைகளுள் ஒன்று. தலைமகன் ‘யான் தலைவியை மணந்து கொண்டமையை நுமர்க்குக் கூறுக’ எனப் பாங்கியிடங் கூறுதல்.

வரவு அறிவுறுத்தல் :

இது உடன் போக்கிடையீட்டின் வகைகளுள் ஒன்று. தலைவியின் சுற்றத்தார் பின்வருதலைத் தலைமகள் கண்டு தலைவனுக்கு உணர்த்தல்.

வரை விடைவைத்துப் பொருள் வயிற் பிரிதலின் வகை :

தலைவன் தான் திருமணத்தை இடையிலே வைத்துப் பொருள் காரணமாகப் பிரிந்து போவதைத் தலைவிக்கு