உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

இளங்குமரனார் தமிழ்வளம் 4

மீட்சியில் தலைவியது ஊரைத்தாம் சார்ந்தமையைத் தலைவிக்குக் கூறுதலும், தமக்கு முன்னால் செல்பவரிடம் தலைவனொடுதான் வருவதைப் பாங்கியர்க்குத் தலைவி கூறிவிடுத்தலும், முன் சென்றவர் தலைவன் தலைவி வருகையைப் பாங்கிக்குக் கூறுதலும், அச்செய்தியைப் பாங்கியர் கேட்டு நற்றாய்க்குக் கூறுதலும், அச்செய்தியைக் கேட்ட நற்றாய் தலைவன் தலைவியைத் தன் இல்லிற்கு அழைத்து வருவானா? அவன் நற்றாய் இருக்கு மிடத்திற்கு அழைத்துச் சல்வானா என்பதை வெறி வறி யாட்டாளனிடம் வினவுதலுமாகிய ஆறும் மீட்சியின்விரிகளாகும்.

மெய்ப்பாடு :

மெய்யின் கண் தோன்றுவது மெய்ப்பாடு. அஃதாவது. வெண்பளிங்கில் செந்நூல் கோத்தால் அதன் செம்மை புறத்தே தோன்றுமாறுபோல உள்ளங் கருதியதைச் சொற்றளர்வு, மெய் வியர்ப்பு, கண்ணீர் நிகழ்ச்சி, மெய்விதிர்ப்பு, மெய்வெதும்பல், மெய்ம்மயிரரும்பல் முதலிய குணங்களான் வெளிப்படுத்து

வதாம்.

மெய்ப்பாட்டின் பெயர் :

6

நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், உவகை, வெகுளி என்பன மெய்ப்பாட்டின் பெயர்களாகும். இவற்றுள், நகை என்பது-சிரிப்பு; அது முறுவலித்து நகுதலும், அளவே சிரித்தலும், பெருகச் சிரித்தலும் என மூன்று வகைப் படும். அழுகை என்பது-துயரம். தானே துயரப்படுதலும், பிறரது துயரங்கண்ட வழி துயரப்படுதலும் என இருவகைப்படும். இளிவரல் என்பது-இழிவு. மருட்கை என்பது-வியப்பு. அச்சமென்பது-பயம். பெருமிதம் என்பது-வீரம். வெகுளி என்பது-கோபம். உவகை யென்பது-காமம் முதலிய மகிழ்ச்சி. மெய்ப்பாட்டிற்குரிய பிற இடங்கள் :-

உடைமை, இன்புறுதல், நடுநிலைமையிற் நிற்றல், எல்லா வுயிர்க்கும் அருள் செய்தல், தன்மை பேணுதல், அடக்கம், நீக்க வேண்டியவைகளை நீக்கி யொழுகுதல், அன்பு, அளவிற் குற்ற மாயினும் குணமாயினும் மிகுதல், பிறரை வருத்தல், சூழ்ச்சி, வாழ்த்துதல், நாணுதல், தூங்குதல், உறக்கத்தின்கண் வாய்ச் சோர்வு படல், சினத்தல், எண்ணுதல், அஞ்சுதல், சோம்பல் கருதுதல், ஆராய்ச்சி, காரிய விரைவு, உயிர்ப்பு, கையாறு, துன்பம், மறதி, பிறராக்கம் பொறாமை, வியர்த்தல், ஐயம், ஒருவனை நன்கு மதியாமை, நடுக்கம் ஆகிய முப்பத்திரண்டும்,