உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள்

211

முன்பனிக்காலத்தின் தன்மை :

மார்கழி, தை ஆகிய இரு மாதங்களும் முன்பனிக் காலமாகும். இக்காலத்துக் கொண்டற்காற்றுவீசும். தூக்கணங் குருவியும், கூகையும், ஆந்தையும் மகிழும். மாவும் சிவந்தியும் மலரும். இலந்தை பழுக்கும். குன்றி காய்க்கும். செந்நெல் விளையும். கரும்பு முதிர்ச்சி அடையும். இவையே முன்பனிக் காலத்தின் தன்மைகளாகும்.

முன்னுற வுணர்தல் :

இது பாங்கிமதி உடன்பாடு என்னும் களவியல் கிளவித் தொகைக்குரிய வகைகளுள் ஒன்று. பாங்கற் கூட்டத்துக்கண் தலைவி தலைவனைப் புணர்ந்து மீண்டு வந்து பாங்கிமுன் உற்ற வழிப் பாங்கி, பூவினாலும், சாந்தினாலும், தலைவனுடன் கூடிய கூட்டத்தால் தலைவியிடத்து உளதாகிய நறு நாற்றமும்; கூட்டத் தாற் பிறந்ததோர் அழகும்; தோழியர் கூட்டத்துடன் சேர்ந் தொழுகாது தன்னைத் தனியாகப் பேணியொழுகுதலும்; உண்ணும் அளவிற்குறைதலும்; தான் செய்கின்ற பூப்பறித்தல் நீராடல் முதலிய வினைகளைத் தோழி அறியாதவாறு மறைத்துத் தனியே செய்தலும்; எத்திசையிலும் சென்று விளையாடுபவள். இப்பொழுது குறிப்பிட்ட ஓரிடத்திற்கே செல்லுதலும்; ஓரிடத்திலேயே அதிகமாகப் பழகுதலும் ஆகிய ஏழுவகை மன நிகழ்ச்சிகளைத் துணையாகக் கொண்டு தலைவியை ஐயமுற்று ஆராய்ந்தும் அவற்றால் ஐயந்தெளிந்தும், மெய்யினாலும் பொய்யினாலும் பல்வேறு வகைப்பட்ட இருபொருள் தரும் சொற்களால் ஆராய்ந்தும் பாங்கி கூட்டம் உண்மையை அறிந்து கொள்வாள்.

மீட்சி :-

இதுவும் களவுவெளிப்பாட்டிற்குரிய கிளவித் தொகைகளுள் ஒன்று. புதல்வியைத் தேடிச் சென்ற செவிலி மீண்டு வருதலும், உடன்போன தலைவனும் தலைவியும் மீண்டு வருதலுமாம். மீட்சியின்வகை

தெளித்தல், மகிழ்ச்சி, வினாதல், செப்பல் என்ற நான்கும் மீட்சியின் வகைகளாகும்.

மீட்சியின் விரி :-

தலைவி நெடுந்தூரம் சென்றமையைச் செவிலித் தாய் நற்றாய்க் குணர்த்தலும், ஐம்பத்து நான்காம் நாள், தலைவன்