உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆஞ்சிக் காஞ்சி: அ

புறப்பொருள்

229

இறந்துபட்ட அன்பு மிக்க தன் கணவனோடு நெருப்பினுட் புகுந்து உயிர்நீக்கும்மடந்தையினது மிகுதியைச் சொல்லியது ஆஞ்சிக் காஞ்சி என்னுந்துறையாம்.

(எ.டு)

“தாங்கிய கேளொடு தானும் எரிபுகப்

பூங்குழை யாயம் புலர்கென்னும்-நீங்கா

விலாழிப் பரித்தானை வெந்திறலார் சீறூர்ப் புலாழித் தலைக்கொண்ட புண்”

ஆஞ்சிக்காஞ்சி-ஆ

கணவன் உயிரைப் போக்கிய வேலினாலேயே அவனது மனைவி தனது உயிரைப் போக்கிக் கொளினும் ஆஞ்சிக் காஞ்சி என்னுந்துறையாம்.

(எ.டு)

“கவ்வை நீர் வேலிக் கடிதேகாண் கற்புடைமை

வெவ்வேல்வாய் வீழ்ந்தான் விறல்வெய்யோன்- அவ்வேலே அம்பிற் பிறழுந் தடங்கண் அவன்காதற்

கொம்பிற்கும் ஆயிற்றே கூற்று.'

ஆபெயர்த்துத்தருதல்:

வெட்சி மறவர் கைக் கொண்ட ஆக்களைக் குறுநிலமன்ன ராயினுங் காட்டகத்து வாழும் மழவராயினும் மீட்டுத்தருதலாம். (எ.டு)

“ஏறுடைப் பெறுநிரை பெயர்தரப் பெயரா

திலைபுதை பெருங்காட்டுத் தலைகரந் திருந்த வல்வின் மறவ ரொடுக் கங்காணாய் செல்லல் செல்லல் சிறக்கநின் னுள்ள

முருகு மெய்ப்பட்ட புலைத்தி போலத்

தாவுபு தெறிக்கி மான்மேற்

புடையிலங் கொள்வாட் புனைகழ லோயே”

இது குறுநில மன்னர் நிரை மீட்டது.