உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

இளங்குமரனார் தமிழ்வளம்

4

ஆரெயில் உழிஞை:

உழிஞை மறவர் நொச்சியாரின் மதிலினது வன்மையைக் கூறியது ஆரெயில் உழிஞை என்னும் துறையாம்.

(எ.டு)

ஆர்:

அை

“மயிற்கணத் தன்னார் மகிழ்தேறல் ஊட்டக் கயிற்கழலார் கண்கனல் பூப்ப-எயிற்கண்ணார் வீயப்போர் செய்தாலும் வென்றி அரிதரோ மாயப்போர் மன்னன் மதில்.”

தறுகண்மையுடைய சோழன் போர்க்களத்தின்கண் தமக்கு அடையாளமாக அணிந்து கொள்ளும் ஆத்தி மாலையைப் புகழ்ந்தது ஆர் என்னும் துறையாம். (ஆர்-ஆத்திமாலை.)

(எ.டு)

"கொல்களி றூர்வர் கொலைமலி வாள்மறவர்

வெல்கழல் வீக்குவர் வேலிளையர்-மல்கும் கலங்கல் ஒலிபுனற் காவிரி நாடன்

அலங்கல் அமரழுவத் தார்.

ஆர் அமர் ஓட்டல்:

குறுநில மன்னருங் காட்டகத்து வாழும் மறவரும் போர்த் தொழில் வேந்தரோடு போர்செய்து புறங்காண்டல் ஆர் அமர் ஓட்டலாகும்.

ஆளெறிபிள்ளை:

ஆனிரையை மீட்டற் பொருட்டு வெட்சி மறவரோடு போர் செய்து ஆற்றாது ஓடி வரும் கரந்தை மறவரை ஒரு மறவன் எதிரே தடுத்து இகழ்ந்து பின்னர்த் தான் ஒருவனுமே சென்று வெட்சி மறவரைக் கொன்று வீழ்த்தியது ஆளெறிபிள்ளை என்னும் துறையாம்.

(எ.டு)

“பிள்ளை கடுப்பப் பிணம்பிறங்க ஆளெறிந்து

கொள்ளைகொ ளாயந் தலைக் கொண்டார்- எள்ளிப்