உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

(எ.டு)

இளங்குமரனார் தமிழ்வளம்

4

“இன்னா சொகினம் இசையா விரிச்சியும்

அன்னா அலம்வருமென் ஆருயிரும்-என்னாங்கொல் தொக்கார் மறமன்னர் தோலாத் துடிகறங்கப்

புக்கான் விடலையும் போர்க்கு.

ஆனந்தப்பையுள்:

மூங்கில் போன்ற தோளினையுடைய தலைவி தன் கணவன் இறந்து பட துன்பம் மிக மெலிந்து வருந்தியது ஆனந்தப் பையுள் என்னும் துறையாம்

(எ.டு)

“புகழொழிய வையகத்துப் பூங்கழற் காளை திகழொளிய மாவிசும்பு சேர-இகழ்வார்முன் கண்டே கழிகாதல் இல்லையாற் கைசோர்ந்தும் உண்டே அளித்தென் உயிர்.

இயல்மொழி வாழ்த்து: அ

இரவலன் புரவலனிடம் இன்ன வள்ளல் இத்தகைய பொருளைக் கொடுத்தார். நீயும் அவர் போன்று எமக்கு வழங்கு வாயாக எனக் கூறுவது இயல் மொழி வாழ்த்து என்னும் துறையாம்.

(எ.டு)

66

'முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்

எல்லைநீர் ஞாலத் திசைவிளங்கத்-தொல்லை

இரவாமல் ஈந்த இறைவர்போல் நீயும் கரவாமல் ஈகை கடன்.

இயல் மொழிவாழ்த்து : -ஆ

மயக்கமில்லாத பெரிய புகழினையும் குதிரை பூட்டிய தேரினையும் உடைய அரசனது தன்மையினை எடுத்துக் கூறினும் இயல் மொழி வாழ்த்து என்னும் துறையாம்.

(எ.டு)

66

ஒள்வாள் அமருள் உயிரோம்பான் தானீயக்

கொள்வார் நடுவண் கொடையோம்பான்-வெள்வாள்