உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்பொருள்

கழியாமே மன்னர் கதங்காற்றும் வேலான்

ஒழியாமே ஓம்பும் உலகு.

இரவுத்தலைச் சேறல்:

233

மென்மைத் தன்மையுடைய தலைவி செறிந்த இருளை யுடைய நடுயாமத்தே தலைவனைக் காண வேண்டும் என்னும் விருப்பத்தோடே தன் இல்லினின்றும் சென்றது இரவுத்தலைச் சேறல் என்னும் துறையாம்.

(எ.டு)

“பணையாய் அறைமுழங்கும் பாயருவி நாடன் பிணையார மார்பம் பிணையத்- துணையாய்க் கழிகாமம் உய்ப்பக் கனையிருட்கண் செல்கேன் வழிகாண மின்னுக வான்.”

இரவு நீடு பருவரல்:

பகற் பொழுதை வெறுத்துத் தனிமையோடு உறைந்த தலைவி இராப் பொழுதில் காமத்தால் மிகவும் துன்பம் அடைந்தேன் என்று நெஞ்சம் நெகிழ்ந்து சொல்லியது இரவு நீடு பருவரல் என்னும் துறையாம்.

(எ.டு)

“பெண்மேல் நலிவு பிழையென்னாய் பேதுறீஇ விண்மேல் இயங்கும் மதிவிலக்கி- மண்மேல் நினக்கே செய்பகை எவன்கொல்

எனக்கே நெடியை வாழியர் இரவே."

இருவகைப் பட்ட பிள்ளை நிலை:

இருவகைப்பட்ட பிள்ளை நிலையாவது, தன்மேல் வருகின்ற கொடிப் படையை எதிர்த்து நிற்றலும், தன்னுடைய ய வாள்வன்மையால் பகைவரையும் வீழ்த்தித் தானும் வீழ்ந்து படுவதும் ஆகிய இரண்டு பாகுபாடுகளையுடைய போரில், மறவர்கள் தாமே செய்யும் அஞ்சாமையாம்.

(எ.டு)

“ஏற்றெறிந்தார் தார்தாங்கி வெல்வருகென் றேவினான் கூற்றினுந் தாயே கொடியளே-போர்க்களிறு